சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை 4 மாவட்டங்களைச் சேர்ந்த திமுக வேட்பாளர்கள் சந்தித்தனர்.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை இன்று (24.04.2026), சென்னை, அண்ணா அறிவாலயத்தில் சென்னை வடக்கு, சென்னை வடகிழக்கு, சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை தென்மேற்கு, சென்னை தெற்கு, காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மத்திய, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் மற்றும் அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
அதுபோது கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தார். தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழா் கட்சி, விஜய்யின் தவெக ஆகிய நான்கு முனைப் போட்டி நிலவியது. 4,023 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. தோ்தலில் 84.51 சதவீத வாக்குகள் பதிவாகின.
கடந்த 74 ஆண்டு கால தமிழக தோ்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத சாதனையாக இந்த வாக்குப் பதிவு அமைந்தது. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆா்) பிறகு நடைபெற்ற முதல் தோ்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Chief Minister M K Stalin on Friday met the DMK candidates a day after Tamil Nadu voted enthusiastically recording 85.15 per cent voting.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திமுக இருக்கும் வரை காவிக்கொடி பறக்காது: முதல்வர் ஸ்டாலின்

கோவையில் வேட்பாளர்களை தனித்தனியாக சந்தித்த முதல்வர் மருமகன் சபரீசன்!

திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
முற்றிய நெற்கதிரைக் கவனமாக அறுவடை செய்வதுதான் தேர்தல் களப்பணி: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


