மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!

திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை பற்றி...

News image

முதல்வர் மு.க. ஸ்டாலின் - யூடியூப் / M.K. STALIN

Updated On :15 ஏப்ரல் 2026, 6:34 am

திமுக எம்பிக்களுடன் கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை (ஏப்ரல் 16) தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தில் மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை திருத்த மசோதாக்களை நிறைவேற்றி, அரசமைப்பில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தொகுதி மறுவரையறை தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு பாதிக்கப்பட்டால் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிடுவோம் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து முதல்வர் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை விடியோ வெளியிட்டிருந்தார்.

மேலும், தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிகட்டப் பிரசாரம் நடைபெற்றாலும், எம்பிக்கள் கலந்துகொள்வார்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்பிக்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து எம்பிக்களுடன் காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

Summary

Chief Minister Stalin discuss with DMK MPs!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.