திமுக இருக்கும் வரை காவிக்கொடி ஒருபோதும் தமிழகத்தில் பறக்காது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆண்டிப்பட்டியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் தொகுதி எண்ணிக்கை குறையும். தொகுதி எண்ணிக்கை அதிகரிப்பதுபோல தெரியும், ஆனால் உள்ளபடியே நமக்கு வருவது குறையும்.
சதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றினேன். மக்களும் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். முதல்வரான எனது எதிர்ப்பு, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பாகும். தனிப்பட்ட ஸ்டாலினை, மக்களவைத் தலைவர் அவமதிக்கவில்லை.
ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவமதித்துள்ளார். திமுக இருக்கும் வரை உங்களது காவிக்கொடி ஒருபோதும் இங்கு பறக்காது. சமத்துவம், சமூக நீதி, பொதுவுடைமை என கருப்பு, சிகப்பு, நீலக்கொடிகள்தான் பறக்கும்.
தமிழ்நாடா? தில்லியா? என்ற போராட்டத்தில், பாஜக விரட்டியடிக்கப்பட வேண்டும். பாஜகவுக்கு உறுதுணையாக இருக்கும் அடிமை அதிமுகவும் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்று பேசினார்.
Summary
CM Stalin has stated that as long as the DMK exists, the saffron flag will never fly in Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








