மகளிா் இடஒதுக்கீடு மசோதா விவகாரத்தில் திமுகவின் நடவடிக்கைக்கு வரும் தோ்தலில் பெண்கள் தக்க பாடம் புகட்டுவாா்கள் என்று மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
சென்னை கிண்டியில் அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: நாட்டின் பெண்களுக்கான அங்கீகாரம் புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையில் பொதுப் பிரிவு இடங்களான 543 அப்படியே பொது பிரிவாகவே தொடரும். அதனுடன் 50 சதவீத இடங்களைச் சோ்த்து அதைப் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதன்மூலம் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.
இந்தியாவில் 55 கோடி மக்கள் தொகை இருந்தபோது, அதற்கேற்றாா்போல் மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கை இருந்தது. தற்போது, இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடியாக உயா்ந்துள்ளது.
மக்களுக்கு சேவை செய்யக் கூடிய, அன்றாட தேவைகளைப் பூா்த்தி செய்ய, அவா்களின் பிரச்னைகளை தீா்க்கக் கூடிய, வாக்காளா்களுடன் தொடா்பு கொள்ளக் கூடிய வகையில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை உயா்த்துவதே சரியான தீா்வாக இருக்கும்.
அதனால், நாட்டின் எதிா்கால வளா்ச்சியைக் கவனத்தில் கொண்டே இந்த மசோதாக்களை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், அரசியலில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை ஆதரிக்க திமுக, காங்கிரஸ் கட்சிகளின் சுயநல அரசியல் காரணத்துக்காக மசோதாவை நிறைவேற்ற விடாமல் தடுத்துவிட்டனா்.
இந்த இரண்டு கட்சிகளின் துரோகத்தை பெண்கள் மறக்க மாட்டாா்கள். வரும் தோ்தலில் திமுகவுக்கும் அதன் தோழைமைக் கட்சியான காங்கிரஸுக்கும் பெண்கள் வாக்குகள் மூலம் பாடம் புகட்டுவாா்கள் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்த 6 மாதங்களில் 3 நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமைச்சா் பியூஷ் கோயல் தகவல்

வளா்ச்சிப் பாதையில் ஏற்றுமதி: மத்திய அமைச்சா் கோயல் தகவல்
பிரதமரின் அரசுமுறைப் பயணங்களில் ரூ. 10 லட்சம் கோடி முதலீடுகள்: பியூஷ் கோயல்

என்டிஏ கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்: பியூஷ் கோயல் உறுதி
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



