மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை நடத்தியது பற்றி...

News image

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை - X

Updated On :17 ஏப்ரல் 2026, 4:46 am

உதகையில் பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு சென்ற ஹெலிகாப்டரைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், உதகையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் போஜ ராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் குஷ்பு பயணம் மேற்கொண்டார்.

இதனிடையே, உதகையில் குஷ்பு பயணித்த ஹெலிகாப்டர் தரையிறங்கியவுடன் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனைக்குப் பின்னர், கார் மூலம் அங்கிருந்து புறப்பட்டு பிரசாரம் நடைபெறும் இடத்துக்கு குஷ்பு சென்றார்.

கடந்த வாரம் உதகையில் பிரசாரம் மேற்கொள்வதற்காக சென்ற பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் ஹெலிகாப்டரையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Flying Squad Conducts Inspection on Helicopter Carrying Khushbu!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.