தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் இன்று (ஏப். 3) வெளியிடப்பட்டது. இதில், 2 பெண்கள் உள்பட 27 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தல் வேட்பு மனுத்தாக்கலுக்கு இன்னும் மூன்று நாள்களே இருக்கும் நிலையில், காங்கிரஸ் தரப்பில் இருந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தொடர்ந்து இழுபறி நிலவிவந்தது.
தில்லியில் நேற்றிரவு நடந்த காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் வேட்பாளர்கள் பட்டியல், நாளைக்குள் வெளியிடப்படும் என்றும் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் போட்டியிடும் மொத்தமுள்ள 28 தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியைத் தவிர்த்து மற்ற தொகுதிகளுக்கான 27 பேர் கொண்ட முதற்கட்ட பட்டியல் இன்று (ஏப்.3) வெளியிடப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 28 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரனுக்கு பென்னகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 2 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குளச்சல் தொகுதியில் விளவங்கோடு எம்.எல்.ஏ. தாரகையும், சிங்காநல்லூர் தொகுதியில் ஸ்ரீநிதியும் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளர்கள்
1. பொன்னேரி (தனி) -துரை சந்திரசேகர்
2. ஸ்ரீபெரும்புதூர் (தனி) - செல்வப்பெருந்தகை
3. சோளிங்கர் - முனிரத்தினம்
4. உதகமண்டலம் - ராமச்சந்திரன்
5. ஈராடு கிழக்கு - கோபிநாத் பழனியப்பன்
6. அறந்தாங்கி - டி.ராமச்சந்திரன்
7. கடலூர் - சந்திரசேகரன்
8. மயிலாடுதுறை - ஜமால் யூனிஸ் முகம்மது
9. காரைக்குடி - எஸ்.மாங்குடி
10. சிவகாசி - கணேசன் அசோகன்
11. திருவாடனை - ராம.கருமாணிக்கம்
12. திருவைகுண்டம் - ஊர்வசி அமிர்தராஜ்
13. நாங்குநேரி - ரூபி மனோகரன்
14. குளச்சல் - தாரகை கத்பர்ட்
15. விளவங்கோடு - டிடி.பிரவீன்
16. கிள்ளியூர் - ராஜேஸ்குமார்
17. வேளச்சேரி - ஜெ.எம். ஹசன் மௌலானா
18. ஊத்தங்கரை (தனி) - குப்புசாமி
19. துறையூர் (தனி) - லெனின் பிரசாத்
20. கவுண்டம்பாளையம் - சூரிய பிரகாஷ்
21. ஆத்தூர் (தனி) - அர்த்தனாரி
22. பென்னாகரம் - ஜி.கே.எம்.தமிழ்க்குமரன்
23. சிங்காநல்லூர் - ஸ்ரீநிதி நாயுடு
24. அம்பாசமுத்திரம் - வி.பி.துரை
25. கிருஷ்ணகிரி - செல்லக்குமார்
26. உசிலம்பட்டி - சரவணக்குமார்
27. சங்கரன்கோவில் - சங்கை கணேசன் ஆகியோர் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டுள்ளனர்.
Summary
The Congress party's candidate list for the Legislative Assembly elections in Tamil Nadu was released today (April 3).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன்

3 ஆவது முறையாக ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் செல்வப்பெருந்தகை!

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏன்?

ராகுல்காந்தி கேரளம் பயணம்! தாமதமாகும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


