மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

3 ஆவது முறையாக ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் செல்வப்பெருந்தகை!

ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் போட்டியிடுவது குறித்து...

News image

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை - (கோப்புப் படம்)

Updated On :3 ஏப்ரல் 2026, 11:07 am

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் போட்டியிடுகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப். 23 அன்று நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சியான திமுக, அதிமுக, நாதக மற்றும் தவெக தலைமையில் 4 முனைப் போட்டி நடைபெறுகிறது.

இதையடுத்து, திமுக கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில் முதற்கட்டமாக 27 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் நீண்ட இழுபறிக்கு இடையே வெள்ளிக்கிழமை (ஏப். 3) அன்று வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு. செல்வப்பெருந்தகை, ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதியில் 3 ஆவது முறையாகப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக, 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் சுமார் 11,497 வாக்குகள் வித்தியாசத்தில் தேமுதிக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் 2021 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்ற செல்வப்பெருந்தகை முதல்முறை காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார். பின்னர், 2024 ஆம் ஆண்டு தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் 2011 ஆம் ஆண்டு செங்கம் (தனி) தொகுதியில் செல்வப்பெருந்தகை போட்டியிட்டுத் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Tamil Nadu Congress Committee President Selvaprerunthagai is contesting from the Sriperumbudur (Reserved) constituency.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.