கேரளத்தில் எல்டிஎஃப் ஆட்சி முடிவடைந்து ஒரு புதிய சகாப்தம் தொடங்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.9 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 78 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. வரும் மே 4 ஆம் தேதி வாக்குகள் கணக்கிடப்பட்டு தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் ஹரிப்பாடு தொகுதியின் வேட்பாளருமான ரமேஷ் சென்னிதலா, “ இந்த பேரவைத் தேர்தலில் நாங்கள் மாபெரும் வெற்றியை எதிர்பார்க்கிறோம். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.
இடது ஜனநாயக முன்னணியின் (எல்.டி.எஃப்) ஆட்சி முடிவடைந்து, காங்கிரஸ் தலைமையிலான புதிய சகாப்தம் உருவாகும். எல்.டி.எஃப் -இன் ஆட்சியில் மக்கள் சோர்வடைந்து அடுத்த கட்டத்துக்கு நகர தயாராகிவிட்டனர்” எனத் தெரிவித்தார்.
இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவற்றுக்கிடையே மும்முனைப்போட்டி நிலவிவரும் சூழலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று தற்போதைய முதல்வர் பினராயி விஜயன் ஹாட்ரிக் அடிப்பாரா அல்லது வேறு கட்சிகள் ஏதேனும் ஆட்சியைப் பிடிக்குமா என்பதெல்லாம் மே 4 ஆம் தேதி தெரியவரும்.
Summary
Senior Congress leader Ramesh Chennithala has stated that the LDF rule in Kerala will come to an end, and a new era will begin.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்டிஎஃப் ஊழல் மிகுந்த அரசு என்பது குழந்தைக்குக்கூட தெரியும்: பிரியங்கா காந்தி
முதல்வர் மட்டுமே ஆட்சி செய்ய அவர் என்ன கடவுளா? - கேரளத்தில் ராகுல் இறுதிகட்ட பிரசாரம்

கேரள தேர்தல்: பாஜக - எல்டிஎஃப் இடையே ரகசிய ஒப்பந்தம்! பிரியங்கா காந்தி தாக்கு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



