நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த சம்பவத்தில், தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்படும் நிலையில், அடுத்தாண்டு முதல் கணினி வழியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு, ஜேஇஇ-உடன் ஒருங்கிணைத்து ஒரே தேர்வாக நடத்தப்படுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
கணினி முறையில் இளநிலை பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒருங்கிணைந்த தேசிய பொது நுழைவுத் தேர்வை நடத்துவது சாத்தியமா என்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நீட் இளநிலை 2026 வினாத்தாள் கசிந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நாடாளுமன்ற குழுவிடம், தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2024ஆம் ஆண்டு நீட் தேர்வின்போது வினாத்தாள் கசிந்த நிலையில், இஸ்ரோ முன்னாள் தலைவர்டாக்டர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையல் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவினர் அளித்த பரிந்துரை குறித்து மத்திய அரசு தற்போது பரிசீலனை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தயாரிப்புக் குழுவிலிருந்தே கசிந்த வினாத்தாள்
நாடு முழுவதும் மே 3ஆம் தேதி நடந்த நீட் தேர்வில் அளிக்கப்பட்ட வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த வினாத்தாள் பல மாநிலங்களுக்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டு, நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டது. ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடைபெறவுள்ளது.
இதனை விசாரித்து வரும் சிபிஐ எடுத்திருக்கும் கைது நடவடிக்கையில் 8-ஆவது நபராக, மகாராஷ்டிர மாநிலம், லத்தூரில் பேராசிரியா் பி.வி.குல்கா்ணி கைதானார். வேதியியல் துறையில் நிபுணரான இவா், நீட் வினாத்தாள் தயாரிப்புக் குழுவுடன் பல்லாண்டுகளாக தொடா்பில் இருந்தவா். (பல்லாண்டுகளாக?)
குல்கா்ணியிடம் நடத்தப்பட்ட விசாரணையின்படி, மகாராஷ்டிர மாநிலம், புணேயைச் சோ்ந்த உயிரியல் பாடப்பிரிவு பெண் விரிவுரையாளா் மனீஷா மந்தாரே கைதாகிறார்.
‘என்டிஏவின் நீட் வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் நிபுணா் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டவரான மனீஷா மந்தாரே, தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களுக்கான வினாத்தாள்களை முழுமையாக அணுகும் வசதியைக் கொண்டிருந்தாா்.
இவர்கள்தான் மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு வினாத்தாளை கசியவிட்டிருக்கிறார்கள்.
ரகசிய தகவல்களை அணுகும் தங்களின் சிறப்புரிமையைத் தவறாகப் பயன்படுத்தி, இருவரும் இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கிறார்கள். வினாத்தாளை தயாரிப்பவர்களே அதனை கசியவிட்டால், பிறகு எப்படித்தான் தேர்வை நடத்துவது. வினாத்தாளை எங்கோ கசியவிட்டுவிட்டு, தேர்வெழுதும் பிள்ளைகளின் ஆடைகளில் கட்டுப்பாடுகளைப் போட்டு கெடுபிடி காட்டியிருக்கிறது தேசிய தேர்வு முகமை.
வினாத்தாள் கசிந்ததைவிட, தேர்வெழுதும் மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் கொடுக்கப்படும் கெடுபிடிகள்தான் உண்மையில் பெற்றோருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
நீட் வினாத்தாள் கசிந்தது உறுதியானதை தொடர்ந்து, அதுவும் உள்ளிருந்தே கசிந்திருப்பது உறுதியானதும், அடுத்தாண்டு முதல் கணினி வழியில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வித் துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
ஏற்கனவே நீட் தேர்வை ஏன் கணினி முறையில் நடத்தக் கூடாது என்று பல தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டு, தொடர்ந்து பல ஆண்டுகளாக நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடுப் புகார்கள் எழுந்து, இந்த ஆண்டு அது விஸ்வரூபம் எடுத்து நீட் தேர்வே ரத்து செய்யப்படும் நிலை ஏற்படும்வரை தேசிய தேர்வு முகமை மிகப் பொறுமையாகக் காத்திருந்துள்ளது இந்த அறிவிப்பை வெளியிட.
ஜேஇஇ போல கணினி முறையில் தேர்வு என்றால், ஏன், ஜேஇஇ - நீட் என இரு தேர்வுகளையும் ஒருங்கிணைந்து நடத்தக் கூடாது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான் ஜேஇஇ - நீட் தேர்வுகளை ஒருங்கிணைத்து பொதுவான நுழைவுத் தேர்வை நடத்துவது என்ற உயர்நிலைக் குழு அளித்த பரிந்துரையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
ஆண்டுதோறும் ஜேஇஇ தேர்வை எழுதும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வையும் எழுதி வருகிறார்கள். அதுபோன்றவர்கள் தனித்தனியாக விண்ணப்பம், கட்டணம், தேர்வு என பல சிரமங்களை அனுபவிக்கும் நிலையில், ஒருங்கிணைந்து நடத்தப்படும் தேர்வால் நிச்சயம் எதிர்காலத்தில் மாணவர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Central government considering merging JEE-NEET into a single exam
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏ-க்கு உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள்!

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு இணைய வழியில் நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருப்பது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

மாணவா்களின் வாழ்க்கையுடன் விளையாடும் மத்திய அரசு: கபில் சிபல் விமா்சனம்







