ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளில் லட்சக்கணக்கானோர் தொழில்கல்வியில் பட்டம் பெற்றாலும் வேலை வாய்ப்பு பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. சில வேளைகளில் வேலைக்கான திறன் பெற்ற பொறியாளர்கள் உருவாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுகிறது.
அரசுக் கல்லூரிகள் மட்டுமல்லாமல் பெரிய பெரிய தனியார் கல்லூரிகளில் அதிகம் பொருள் செலவிட்டு தொழிற்கல்வி படித்தாலும்கூட அதில் போதிய திறன் இல்லாததால், வேலைவாய்ப்புக்கான சந்தையில் திறன்மிக்க மனிதவளத்துக்குப் பற்றாக்குறை தொடர்ந்து இருக்கத்தான் செய்கிறது.
திறன்மிக்க மாணவர்கள் பொறியாளர்களாக உருவாகாமல் போவதற்கு மொழித் தடையும் ஒரு காரணம். எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில், தொழில்படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக்கப்பட்டு வருகிறது.
அதில் உள்ள சிக்கல்களுக்கு மூன்றாவது செயல்திட்டமாக இருப்பது பற்றி..
செயல்திட்டம் 3: தக்கவகையில், மொழிஅறிஞர்களைக் கலந்தாலோசித்து, கலைச்சொற்களைத் தரப்படுத்த வேண்டும்.
பெயர்கள் /குறிப்பிட்ட சிலசொற்கள்/ தரப்படுத்தப்பட்ட பெயர் முறை ஆகியவற்றை மொழி மாற்றாமல் இருத்தல்: தமிழ்மொழியின் உச்சரிப்பு முறைக்கேற்ப, பெயர்களைக்கூட மாற்றும் வழிகளை இலக்கணம் வகுத்துள்ளது. ஜானகியை சானகி என்றும், ராமனை இராமன் என்றும், ரங்கம் என்பதை அரங்கம் என்றும், ஊர்வசியை உருப்பசி என்றும், ரிஷ்யசிருங்கரை கலைக்கோட்டு முனி என்றும் புலவர்கள் மாற்றியுள்ளனர். இருப்பினும், இன்றைய
அளவில் இதுசரிப்பட்டுவருமா? புரியாமல் போகலாம்; பொருள்மாறிப் போகலாம்; தவறானதகவல்கள்உருவாகலாம் இத்தகைய சிக்கல்களையும் குழப்பங்களையும் தவிர்ப்பதற்காகப் பெயர்களைஅப்படியே கையாளலாம். ஜார்ஜ், ராஜா, சாக்ரடீஸ், ஃபிரான்ஸ் போன்றே எழுதலாம்.
அறிவியல் சார்ந்த துறைகளில், பன்னாட்டு அளவிலான பெயரிடல் முறைகள் உண்டு. இண்டர்நேஷனல் நாமன்க்ளேச்சர் என்பார்கள். விலங்கியல் பெயர்கள், தாவரவியல் பெயர்கள்ஆகியவை இவ்வகையைச் சேரும். வேப்பமரத்தின் தாவரவியல் பெயர் அஸாதிராக்டா இண்டிகா என்பதாகும். இந்திய துணைக் கண்டப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட தாவரம் என்பதால்தான் இண்டிகா என்னும் பெயரிடப்பட்டது. இருப்பினும், அறிவியல் பெயரைக் குறிக்கும்போது, இந்தப் பதத்தை மொழி மாற்றுதலோ, இந்தியாவைச் சேர்ந்த என்று விளக்குதலோ கூடாது; இண்டிகா இண்டிகாதான். பொதுப்பெயர் பயன்பாட்டில், நீம், நிம், வேம்பு, நிம்ப போன்றபெயர்களை உபயோகிக்கலாம்.
நம்முடைய மார்புப் பகுதியில் இரண்டு தசைகள் உள்ளன. ஒன்று அளவில் பெரியது; மற்றது சிறியது. பெக்டராலிஸ் மேஜர் மற்றும் பெக்டராலிஸ் மைனர். பெக்டரல்' என்னும் பதம், மார்புப்பகுதியைக் குறிக்கும். எனவே பெரிதாக இருக்கும் தசை பெக்டராலிஸ் மேஜர் ஆனது; சிறியதுமைனர்ஆனது. பாடம் கற்றுக்கொடுக்கும்போது விளக்கம் தருவதற்காகவோ, செயல்பாடுகளைத் தெளிவிப்பதற்காகவோ, இவற்றை மார்புப் பெருந்தசை என்றும் மார்புச்சிறுதசை என்றும் கூறலாம். ஆனால், அறிவியல் பெயர்களைக் குறிக்க வேண்டிய இடங்களில் அப்படியே உரைக்க வேண்டுமேயன்றி மாற்றலாகாது. தவறி மாற்றிவிட்டால், வெவ்வேறுமொழி பயில்கிற வல்லுநர்கள், தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும்போது குழப்பமும் நேரிடலாம்.
Summary
The third action plan in the series is The Problem and the Ideal Solution of Higher Education in Tamil!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் உயர்கல்வி: சிக்கலும் தீர்வும்? தொழில்நுட்ப மேம்பாடு அவசியம்

தமிழில் உயர்கல்வி: சிக்கல்களும் தீர்வும்! 4-வது செயல்திட்டம்!

தமிழில் உயர்கல்வி: என்ன சிக்கல்? இரண்டாவது செயல்திட்டம்!

தமிழில் உயர்கல்வி: என்ன தீர்வு? முதல் செயல்திட்டம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



