எண்ணற்ற பொறியியல் கல்லூரிகள் நாடு முழுவதும் இயங்கி வருகின்றன. அவற்றில், ஆண்டுதோறும் பல்வேறு புதிய புதிய பொறியியல் படிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டு லட்சக்கணக்கானோர் தொழில்கல்வியில் பட்டம் பெற்று வருகிறார்கள்.
அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அதிகம் பொருள் செலவிட்டு தொழிற்கல்வி படித்தாலும்கூட வளாகத் தேர்வின்போது, போதிய திறன் இல்லாததால், வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதில் மாணவர்கள் பலரும் பின்தங்கி விடுகிறார்கள்.
மாணவர்களின் திறனை வளர்க்க, தொழில்படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க வேண்டும் என்ற கருத்து அதிகரித்து வருகிறது. மறுபக்கம், மொழி ஒரு தடையாக இருக்கவே கூடாது, ஆங்கிலத்தில் கற்பித்தால்தான் வளாக நேர்காணல்களின்போது பிரகாசிக்க முடியும் என்ற கூற்றும் எழுகிறது.
தமிழ் மொழியில் கல்வி என்பதில் உள்ள சிக்கல்களுக்கு நான்காவது செயல்திட்டமாக இருப்பது பற்றி..
செயல்திட்டம் 4: குறிப்பிட்ட பதங்களைஅப்படியே பயன்படுத்தல் அவசியம். மொழிபெயர்ப்பு என்பதே இல்லாமல், அறிவின் வளர்ச்சிக்கேற்ப, துறைகள் மேம்படும்போதும், அந்தந்த மொழியிலேயே புதிய சொற்கள் உருவாகும்போதும்கூட, இப்படிப்பட்ட விதிமுறைகள் கண்டிப்பாகத் தேவை.
சொல்லப்போனால், வளமான தமிழ்மொழியில், உயர்கல்வியைப் பயிற்றுவிப்பது என்பது கடினமானது அன்று. பழந்தமிழ் இலக்கியங்களிலேயே சொற்கள் மட்டுமல்ல, அறிவியல் மேம்பாடுகளுக்கு நிகரான தகவல்களும் உள்ளன. துறை வல்லுநர்களும் மொழி வல்லுநர்களும் இணைந்து செயல்பட்டால், விளைவு வெகு அலாதியாக இருக்கும்.
இதெல்லாம் கிடக்கட்டும். பல்வேறு படிப்புகளுக்கான தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுத வேண்டியிருக்கிறதே, பின்னர் ஏன், இந்தமெனக்கெடல் என்று கேட்பவர்களுக்கு சில செய்திகள்:
தாய்மொழியில் கற்பதும் சிந்திப்பதும் அறிவையும் அணுகுமுறையையும் விசாலப்படுத்தும். படைப்பாற்றலை விரிவாக்கும். எந்தத் துறையானாலும், எந்த சாத்திரமானாலும், அது நம்முடைய தமிழ் மொழியில்இருக்கவேண்டும்; அது குறித்ததகவல்கள் இருக்கவேண்டும்.
இன்றைக்குமட்டுமல்ல, என்றைக்காக இருந்தாலும், தமிழில் பயில வேண்டும் என்று விரும்புகிற எதிர்காலச் சிறுவனுக்கும்சிறுமிக்கும் உதவுகிற வகையில், இன்றே இப்பணிகளைச் செய்து, அவர்களுக்கான சொத்தைச் சேகரித்து வைக்க வேண்டியது நமது பொறுப்பு.
எந்த மொழியில் தேர்வெழுதினாலும், படித்துப் புரிந்துகொள்வதற்கும், தெளிவாகச் சிந்திப்பதற்கும் தாய்மொழியிலேயே கற்பதற்கான வாய்ப்புகள் அவசியம். நன்றாகப் புரிந்து உள்வாங்கிக் கொண்டதை, இன்னொருமொழியில்வெளிப்படுத்தி எழுதுவதோ கூறுவதோ சாத்தியம். மொத்தத்தில், தமிழில் முடியும்; தமிழால் முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சிக்காக 302 அம்ச செயல்திட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோ்தல் அறிக்கை வெளியீடு

தமிழில் உயர்கல்வி: சிக்கலும் தீர்வும்.. மூன்றாவது செயல்திட்டம்!

தமிழில் உயர்கல்வி: என்ன சிக்கல்? இரண்டாவது செயல்திட்டம்!

தமிழில் உயர்கல்வி: என்ன தீர்வு? முதல் செயல்திட்டம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


