நாட்டில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகளிர் லட்சக்கணக்கானோர் தொழில்கல்வியில் பட்டம் பெற்றாலும் வேலைவாய்ப்பு என்று வரும்போது பெரும்பகுதியினர் அதற்கேற்ற தகுதியோடு இருப்பதில்லை.
பெரிய கல்லூரிகளில் அதிகம் பொருள் செலவிட்டு தொழிற்கல்வி படித்தாலும்கூட அதில் போதிய திறன் இல்லாததால், வேலைவாய்ப்புக்கான சந்தையில் திறன்மிக்க மனிதவளத்துக்குப் பற்றாக்குறை இருக்கிறது.
இதற்கு முதல் காரணமாக மொழித் தடை உள்ளது. சரியான புரிதல் இல்லாமல் தொழில் கல்வியைக் கற்கும் மாணவர்களால், திறன்களை வளர்த்துக் கொள்ள முடிவதில்லை. எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில், தொழில்படிப்புகளை தாய் மொழியில் கற்பிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக்கப்பட்டு வருகிறது.
அதில் உள்ள சிக்கல்களுக்கு இரண்டாவது செயல்திட்டமாக இருப்பது பற்றி..
செயல்திட்டம் 2: பழந்தமிழ் / பண்டைய இலக்கிய / புழக்கத்திலுள்ள சொற்களைத் தக்கவகையில் புதுப்பித்துக் கையாளலாம்.
சொற்களையும் சொற்றொடர்களையும் தரப்படுத்துதல்: இதுதான் மிகமுக்கியம். அதீத ஆர்வத்தில், அவரவர்கள் அவரவர் எண்ணத்திற்குத் தக்கவாறு மொழிமாற்றம் செய்துவிடுவர். வெவ்வேறு ஆங்கிலச் சொற்களுக்கு ஒரே தமிழ்ச் சொல்லையோ, ஒரே ஆங்கிலச் சொல்லுக்கு வெவ்வேறு வகையான மொழிபெயர்ப்புகளையோ தந்துவிடுவர். இதனால், குழப்பங்கள் மிகுந்து விடும். தமிழுக்கே உரித்தான வல்லொற்றுகளாலும் (க்,ச்,த்,ப் போன்றவை) சிக்கல்கள் வரக்கூடும். வல்லுநர்கள் சேர்ந்தமர்ந்து விவாதித்து, தக்க சொற்களையும்சொற்றொடர்களையும் தரப்படுத்த வேண்டும். புதிய புதிய சொற்களை உருவாக்குகையில், அவ்வப்போது சரிபார்த்துத் தரப்படுத்த வேண்டும். துறை வல்லுநர்களும் மொழி அறிஞர்களும் இணைந்து பணி செய்யவேண்டும்.
ஆங்கிலத்திலுள்ள ஏர் மற்றும் விண்ட் ஆகிய இருசொற்களுக்கும் ஈடாகக் காற்று என்னும் சொல்லையே பேச்சுவழக்கில் பயன்படுத்துகிறோம். ஆனால், அறிவியல்ரீதியாக, இரண்டிற்கும் வேறுபாடுகள் உண்டு. வளிமண்டலத்திலிருக்கும் வளிமங்களின் தொகுப்பு, ஏர் எனப்படும். ஓரிடமிருந்து மற்றோர் இடம் நகர்வது விண்ட் என்றாகும்.
இந்த அடிப்படையை வைத்துக் கொண்டு, ஏர் என்பதை வளி என்றும் விண்ட் என்பதை காற்று என்றும் பேரறிஞர் வா.செ.குழந்தைசாமி தரப்படுத்தினார். ஏர்பொல்யூஷன் என்பது வளிமாசு; விண்ட்ஸ்பீட் என்பது காற்றுவேகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் உயர்கல்வி: சிக்கலும் தீர்வும்? தொழில்நுட்ப மேம்பாடு அவசியம்

தமிழில் உயர்கல்வி: சிக்கலும் தீர்வும்.. மூன்றாவது செயல்திட்டம்!

தமிழில் உயர்கல்வி: என்ன தீர்வு? முதல் செயல்திட்டம்!

தமிழில் உயர்கல்வி: என்ன சிக்கல்? என்ன தீர்வு?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



