முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு! தமிழில் 100க்கு 101 மதிப்பெண் எடுத்த மாணவிக்கு சிக்கல்

10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழில் 100க்கு 101 மதிப்பெண் எடுத்த மாணவிக்கு நேரிட்ட சிக்கல்

News image

பள்ளித் தேர்வு - பிரதி படம் - ENS

Updated On :17 ஜூன் 2026, 1:43 pm IST

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழில் 100-க்கு 101 மதிப்பெண் எடுத்து மன உளைச்சளுக்கு ஆளான மாணவி, குளறுபடிகள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவி புகழேந்தி. இவர் நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 486 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலே முதல் மதிப்பெண் பெற்றிருந்தார்.

பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான போது தமிழ் பாடத்தில் மட்டும் அவர் 91 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்த மதிப்பெண்னை விட குறைவாக மதிப்பெண் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தன் விடைத்தாளின் நகல் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று வெளியான விடைத்தாள் நகலைப் பெற்று ஆய்வு செய்தபோது அதில் பெரும் குளறுபடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மாணவியின் தமிழ் விடைத்தாளில் வினா மற்றும் பக்கம் வாரியாகவும் மதிப்பெண்களைக் கூட்டிப் பார்த்தபோது 101 மதிப்பெண்கள் என வந்துள்ளது.

மாணவி எழுதிய விடைகளின்படி அவருக்கு 97 மதிப்பெண்கள் வரவேண்டிய நிலையில் விடைத்தாள் திருத்திய ஆசிரியர், இரண்டு ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு தலா ஏழு மதிப்பெண்கள் வழங்கி குளறுபடி செய்துள்ளார்.

இந்தத் தவறைக் கவனிக்காத விடைத்தாள் திருத்தியவர், கூர்ந்தாய்வு செய்தவர் மற்றும் தலைமை தேர்வாளர் ஆகிய மூன்று அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களும் கூட்டுத்தொகையை 91 என்று குறித்து மதிப்பெண் பட்டியலிலும் அதையே பதிவிட்டுள்ளனர்.

இதனால் மாணவி பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளார். எனவே மீண்டும் மறு ஆய்வு செய்ய வேண்டும். இதுபோல் நடந்துள்ள குளறுபடிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.