ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பிஎஸ்என்எல் நடத்தும் ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள் அறிவோம்!

பிஎஸ்என்எல் நிறுவனத்தை நமக்கு தொலைத் தொடர்பினை ஏற்படுத்தி தரும் நிறுவனமாக மட்டுமே நாம் பார்த்து வந்துள்ளோம்.  ஆனால் அது

News image
Updated On :31 மே 2016, 7:53 am

பிஎஸ்என்எல் நிறுவனத்தை நமக்கு தொலைத் தொடர்பினை ஏற்படுத்தி தரும் நிறுவனமாக மட்டுமே நாம் பார்த்து வந்துள்ளோம்.  ஆனால் அது தொலைத் தொடர்பு துறை சம்பந்தமான ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளையும் நடத்தி வருகிறது.

பிராட் பேன்ட் டெக்னாலஜி, ஐபீ, நெட்ஒர்க்கிங், சைபர் செக்யூரிட்டி, மொபைல் கம்யூனிகேஷன்ஸ், ஆப்டிக்கல் பைபர் டெக்னாலஜி, டிஜிட்டல் ஸ்விட்சிங் சிஸ்டம்ஸ், டெலிகாம் சப்போர்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர், டிஜிட்டல் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் உள்ளிட்ட ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை நடத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, புதுச்சேரி ஆகிய பகுதிகள் மட்டுமல்லாது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அதற்காக கற்கும் மையங்கள் பல பிஎஸ்என்எல் சார்பாக அமைக்கப்பட்டுள்ளன.   இதில் சேர்ந்து படிக்க விரும்புபவர்கள் அதற்கான இணையதளத்தில் தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்து, உரிய கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். 

அது மட்டுமல்ல, தொலைத்தொடர்பு துறை சம்பந்தமான தொழில்நுட்பத்தைப் படிக்க விரும்பும் பொறியியல் பட்டதாரிகளுக்காக ஏஐசிடிஇ மற்றும் பிஎஸ்என்எல் இணைந்து வேலை வாய்ப்புத் திறமைகளை மேம்படுத்தும் பயிற்சிகளையும் வழங்கி வருகின்றது. 

பயிற்சி வகுப்புகள் :

  • Courses available on Employability Enhancement Training

  • Program (EETP) of AICTE .

  • BSNL Silver Certified Engineer

  • Digital Switching System

  • Digital Transmission System

  • Telecom Support Infrastructure

  • BSNL Gold Certified Engineer

  • Broadband Technology

  • Optical Fibre Technology

  • BSNL Platinum Certified Engineer

  • Mobile Communication

  • IP, Networking and Cyber Security

ஆன்லைனில் விண்ணப்பிக்க: http://learntelecom.bsnl.co.in இணையதள முகவரியில்  உங்களுடைய விவரங்களைப் பதிவு செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.