சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

துணை மருத்துவப் படிப்புகளில் 3,503 காலியிடங்கள்

துணை மருத்துவப் படிப்புகளுக்கு புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின்

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:11 pm

VASUDEVAN.K

சென்னை: துணை மருத்துவப் படிப்புகளுக்கு புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில், 3,503 காலியிடங்கள் உள்ளன.
 தமிழகத்தில் பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட 9 துணை மருத்துவப் படிப்புகளில்  அரசு கல்லூரிகளில் 538 இடங்கள், தனியார் கல்லூரிகளில் 4,765 இடங்கள் என 5,303 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) தொடங்கியது.
 திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் அரசு கல்லூரிகளில் 531 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 528 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் என 1,059 இடங்கள் நிரம்பின.
 இதையடுத்து, புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில் பங்கேற்பதற்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. முடிவில் அரசு கல்லூரிகளில் 3 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 738 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் என 741 இடங்கள் நிரம்பின.
 மொத்த இடங்களில் 1800 இடங்கள் நிரம்பின. அரசு மருத்துவக் கல்லூரிகளில் 538 இடங்களில் 534 இடங்கள் நிரம்பியுள்ளன.
 இன்று கலந்தாய்வு இல்லை: கிருஷ்ண ஜெயந்திக்காக வியாழக்கிழமை விடுமுறை. ஆகவே, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 26) கலந்தாய்வு மீண்டும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.