டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

போதிய மதிப்பெண் இருந்தும் கல்லூரிகளில் சேரமுடியாமல் தவிக்கும் ஏழை மாணவியர்

பிளஸ் டூ தேர்வில் போதிய மதிப்பெண் (1000-க்கும் மேலாக) பெற்றிருந்தும் கல்லூரிகளில் விரும்பிய பாடத்தில் சேர இடம்கிடைக்காமல் ஏழை மாணவியர்

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:28 am

ஜெயப்பாண்டி

பிளஸ் டூ தேர்வில் போதிய மதிப்பெண் (1000-க்கும் மேலாக) பெற்றிருந்தும் கல்லூரிகளில் விரும்பிய பாடத்தில் சேர இடம்கிடைக்காமல் ஏழை மாணவியர் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

 ஆகவே, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது.

  பொறியியல் கல்லூரி மோகம் குறைந்துள்ளதால், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கை பல மடங்கு கூடியுள்ளது.

  வணிகவியல், கணிதம், ஆங்கில இலக்கியம் மற்றும் கணினி அறிவியல் உள்ளிட்ட படிப்புகளில் சேரவே மாணவ, மாணவியர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பிளஸ் டூ தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி பெற்றும், அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளதாலும், கல்லூரி சேர்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

 தனியார் கல்லூரி நிர்வாகங்களுக்கு குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியப் பிரமுகர்கள், அதிகாரிகள் பரிந்துரைப்படியே மாணவ, மாணவியர் சேர்க்கப்படுகின்றனர்.

 ஆனால், பொதுப்படையான மாணவர் சேர்க்கையில் பிளஸ் டூ தேர்வில் 1200 க்கு 1000 க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்களுக்குக் கூட விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கவில்லையாம்.

  கிராமப்புறத்தில் பிளஸ் டூ முடித்துவிட்டு முதல் பட்டதாரியாக ஆசைப்படும் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் அதிக மதிப்பெண் எடுத்திருந்தாலும் சிபாரிசு இருந்தாலே கல்லூரிகளில் சேரமுடியும் என்ற நிலை உருவாகியிருப்பது கவலைக்குரியதாகும்.

 மதுரை விரகனூர் அணையில் சாலையோரம் கரும்புச்சாறு பிழியும் சக்திவேலின் மகள் சுகுணா பிளஸ் டூவில் 1040 மதிப்பெண் பெற்றுள்ளார். அவர் கணக்குப் பதிவியலில் 200 -க்கு 200, பொருளாதாரத்தில் 169, வணிகவியலில் 171, கணித அறிவியலில் 171 என மதிப்பெண் பெற்றிருந்தும் தனியார் கல்லூரிகளில் பி.காம். இடம் கிடைக்கவில்லை.

 மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்த கொததனார் மகள் 1200-க்கு 1080 மதிப்பெண் பெற்றும், கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என கூறுகிறார்.

 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இடஒதுக்கீடு, மதிப்பெண் அடிப்படை என அனைத்து விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதனால் அங்கு ஏழை எளிய மாணவ, மாணவியர் தகுதி அடிப்படையில் விரும்பும் பாடப்பிரிவில் சேரமுடிகிறது.

 ஆகவே, தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மதிப்பெண்ணுக்கு முன்னுரிமை அளிப்பதையும், அரசு விதிகளை கடைப்பிடித்து மாணவர் சேர்க்கை நடைபெறுவதையும் உறுதிப்படுத்தவேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.