/

பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு அட்டவணைக்கு கணித ஆசிரியர்கள் எதிர்ப்பு

பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள பிளஸ் 2 காலாண்டு தேர்வு அட்டவணைக்கு தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:33 am

தமிழ்ச்செல்வன்

பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள பிளஸ் 2 காலாண்டு தேர்வு அட்டவணைக்கு தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

நிகழாண்டு பிளஸ் 2 காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 15-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த அட்டவணையின்படி செப்டம்பர் 18-ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாளும், 19-ம் தேதி கணிதத் தேர்வும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கணிதத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக அட்டவணையில் விடுமுறை அளிக்கப்படாததற்கு தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில தலைவர் வி.விஜயகுமார் கூறியது: பிளஸ் 2 பொதுத்தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு செயல்முறைத் தேர்வின் மூலம் 50 சதம் மதிப்பெண்கள் அளிக்கப் படுகின்றன. ஆனால், கணித பாடத்துக்கு 200 மதிப்பெண்களுக்கும் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டியுள்ளது. மேலும், பொதுத் தேர்வில் தோல்வியடையும் பெரும்பாலான மாணவர்களில் கணித பாடத்திலேயே அதிகம் உள்ளனர்.

இதற்கிடையே, பிளஸ் 2 காலாண்டுத் தேர்வுக்கு 50 சத பாடம் எடுóத்துக் கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், காலாண்டுத் தேர்வில் ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு எழுதிய அடுத்த நாளே கணிதத் தேர்வை மாணவர்கள் எழுதும்பட்சத்தில் பல மாணவர்கள் கணிதத்தில் தோல்வியைத் தழுவ நேரிடலாம். இது அவர்களை மனதளவிóல் பாதிப்பை ஏற்படுóத்திடவும், இந்த பாதிப்பு பொதுத்தேர்வு வரை தொடரவும் வழிவகுக்கக்கூடும்.

எனவே, மாணவர்களின் நலன் கருதி ஆங்கிலம் இரண்டாம் தாள் முடிந்து குறைந்தபட்சம் ஒருநாள் விடுமுறை விட்டு கணித பாடத்துக்கான தேர்வு நடத்திட வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.