ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

5-ம் வகுப்பில் "படைப்பாற்றல் கல்வி' அறிமுகம்!

சென்னை, ஆக. 13:   தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 5-ம் வகுப்பில் "படைப்பாற்றல் கல்வி' அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வித்துறை

News image
Updated On :25 டிசம்பர் 2023, 3:09 pm

ஆர். ஆதித்தன்

சென்னை, ஆக. 13:   தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 5-ம் வகுப்பில் "படைப்பாற்றல் கல்வி' அறிமுகம் செய்யப்பட உள்ளது.



இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



அனைவருக்கும் கல்வி திட்டத்தின் (சர்வ சிக்ஷா அபியான்) மூலம் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் "செயல்வழிக் கற்றல் முறை' அஸ்ரீற்ண்ஸ்ங் ஆஹள்ங்க் கங்ஹழ்ய்ண்ய்ஞ்-அஆக மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இது முதல் வகுப்பில் இருந்து 4-ம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.



அதேபோல, 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை "படைப்பாற்றல் கல்வி முறை' Active Learning Methodology-ALM மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் சிந்தனையையும், பாடங்களை ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்யும் திறன், படைப்பாற்றல் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கல்வி முறை பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

5-ம் வகுப்பில் படைப்பாற்றல் கல்வி முறை:   இதில் 5-ம் வகுப்புக்கு என்ன மாதிரியான கல்வி முறையை அறிமுகம் செய்வது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 5-ம் வகுப்பு முடித்துச் செல்லும் மாணவர்கள், 6-ம் வகுப்பில் இருந்து படைப்பாற்றல் கல்வியை எளிதாகப் படிப்பதற்கு வழிசெய்யும் வகையில், 5-ம் வகுப்பில் படைப்பாற்றல் கல்வியை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.



சோதனை முறையில்...:    இதற்காக, சென்னையில் உள்ள மூன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் சோதனை முறையில், படைப்பாற்றல் கல்வி முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, வரும் கல்வியாண்டில் அதாவது ஓரிரு மாதங்களில் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் 5-ம் வகுப்பில் படைப்பாற்றல் கல்வி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

ஏபிஎல்-லில் புதிய அட்டைகள்:



"செயல்வழிக் கற்றல் முறையில் முதல் வகுப்பில் இருந்து 4-ம் வகுப்பு வரை பயன்பாட்டில் உள்ள அட்டைகளை, தற்போது புதிய அட்டைகளாக மாற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கான பணிகள் ஏறத்தாழ முடிவடையும் நிலையில் உள்ளது.



புதிய கார்டுகளை அச்சடித்து பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.



மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்புகளுக்கான புதிய அட்டைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. செப்டம்பருக்குள் அட்டைகள் அச்சடிக்கப்பட்டு தரப்படும்' என்று அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.