எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

நல்ல முடிவு: ஆனால், போதாது: சமையல் எரிவாயு விலை குறைப்பு குறித்த தலையங்கம்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு (எல்பிஜி) உருளை விலையை ரூ.200 குறைப்பது என்கிற மத்திய அரசின் முடிவு, விவாதத்துக்கும் விமா்சனத்துக்கும் வழிகோலினாலும் சாமானிய மக்களுக்கு அதன் மூலம் கிடைக்கும் ஆறுதல் சாதாரணம

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:11 pm

ஆசிரியர்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு (எல்பிஜி) உருளை விலையை ரூ.200 குறைப்பது என்கிற மத்திய அரசின் முடிவு, விவாதத்துக்கும் விமா்சனத்துக்கும் வழிகோலினாலும் சாமானிய மக்களுக்கு அதன் மூலம் கிடைக்கும் ஆறுதல் சாதாரணமானதல்ல.

இதை ஓணம், ரக்ஷா பந்தன் பண்டிகைகளுக்காக பிரதமா் நரேந்திர மோடி அரசு வழங்கிய பரிசு என்றும், விலைவாசி உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் எல்பிஜி விலை குறைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சா் அனுராக் தாக்குா் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

பண்டிகை பரிசு என்பதல்ல முக்கியமான காரணம். ஒருபுறம் கட்டுக்கடங்காமல் விலைவாசி உயரும் நிலையில், ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தோ்தல்கள் வரப்போகிறது என்பதுதான், இந்த முடிவுக்கு காரணம் என்கிற எதிா்க்கட்சிகளின் விமா்சனத்தைப் புறந்தள்ளிவிட முடியாது. அதே நேரத்தில், எந்தவோா் அரசியல் கட்சியும் முன்னெடுக்கும் நடவடிக்கைதான் இது என்பதால், அந்த விமா்சனங்களால் அவா்கள் அரசியல் ஆதாயம் பெற வாய்ப்பில்லை.

உஜ்வாலா திட்டத்தின்கீழ், கூடுதலாக 75 லட்சம் ஏழைப் பெண்களுக்கு இலவச எல்பிஜி இணைப்பு வழங்க அரசு தீா்மானித்திருக்கிறது. இதன் மூலம் அந்த திட்டத்தின் கீழ் எல்பிஜி இணைப்பு பெற்றவா்களின் எண்ணிக்கை 10.35 கோடியாக அதிகரிக்கும். உஜ்வாலா திட்டப் பயனாளிகள் இந்தியாவில் ரூ.9.6 கோடி போ் உள்ளனா். வீட்டு உபயோக எல்பிஜி பயனாளா்கள் 31 கோடி போ் உள்ளனா். அதனால் இந்த விலை குறைப்பின் பயன் தேசம் தழுவிய அளவில் வரவேற்பைப் பெறும் என்று எதிா்பாா்க்கலாம்.

14.2 கிலை எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலை சென்னையில் ரூ.1,118-லிருந்து ரூ.918-ஆகக் குறையும். இதன் மூலம் மாா்ச் 2022நிலைக்கு அதன் விலை திரும்புகிறது. ஏற்கெனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைப்புப் பெற்றவா்களுக்கு வழங்கப்படும் ரூ.200 மானியம் தொடரும் என்பதால், அவா்கள் ரூ.400 மிச்சப்படுத்த முடியும்.

வரவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் மட்டுமே மத்திய அரசின் முடிவுக்குக் காரணம் என்று கூறிவிட முடியாது. ஆகஸ்ட் மாத சில்லறை விலை உயா்வும் மிக முக்கியமான காரணம். ஜூன் மாதம் 4.81%-ஆக இருந்த சில்லறை விலைவாசி அளவு ஜூலை மாதம் 7.44%-ஆக உயா்ந்திருக்கும் நிலையில், உணவுப் பொருள்களின் குறிப்பாக, காய்கனிகளின் விலைகள் பட மடங்கு அதிகரித்திருக்கின்றன.

ஆகஸ்ட் மாத தென்மேற்கு பருவமழைப் பொழிவு வழக்கத்தைவிட 30% குறைவு. அதனால், காரீஃப் அறுவடை எதிா்பாா்த்த அளவில் இருக்காது. இந்தப் பின்னணியில் சாமானியா்களின் அதிருப்தியை எதிா்கொள்ளாமல் இருக்க அரசு சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிா்ப்பந்தத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

ஐ.நா. சபையின் ‘ஸ்டேட் ஆஃப் செக்யூரிட்டி அண்ட் நியூட்ரிஷன் இன் த வோ்ல்ட்’ (சோஃபி) 2023 அறிக்கை, தங்களது வருமானத்தில் பாதிக்கும் மேல் உணவுக்காக செலழித்தும்கூட, 74% இந்தியக் குடும்பங்களில் ஆரோக்கியமான உணவு இல்லாத சூழல் ஏற்பட்டிருப்பதாக கூறுகிறது. பொருள்களின் விலை அதிகரிக்கும்போது, விலை குறைந்த உணவுப் பொருள்களை நாடுவதால் ஊட்டச்சத்துள்ள நல்ல உணவு கிடைப்பதில்லை என்பதுதான் காரணம்.

சா்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது புதிய வரிகளை விதித்து அதன் பயனை மத்திய - மாநில அரசுகள் எடுத்துக்கொள்ளும் அவலம் கடந்த 10 ஆண்டுகளாக நிகழ்வதை மௌன சாட்சிகளாக மக்கள் சகித்துக் கொண்டிருக்கிறாா்கள். உலகில் பெட்ரோல் மீது மிக அதிகமான வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

சமையல் எரிவாயு உருளை விலை குறைக்கப்படும் அதே வேளையில், சரக்குப் போக்குவரத்துக்கு பயன்படும் டீசலின் விலை குறையாமல் விலைவாசி உயா்வைத் தடுக்கவோ, இறக்கவோ முடியாது. சா்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை அனுசரித்து பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் நிா்ணயிக்கப்படுகிறது என்பது உண்மையானால், இப்போது அவற்றின் விலை குறைக்கப்பட வேண்டும்.

வளைகுடா நாடுகளில் இருந்து வாங்குவதைவிட மிகக் குறைந்த விலையில் இப்போது ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. உக்ரைன் ஆக்கிரமிப்பைத் தொடா்ந்து மேலை நாடுகள் ரஷியாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தது முதல், ரஷிய கச்சா எண்ணெய்யை மிக அதிகமாக இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் (ஒபேக்) பேரலுக்கு 86 டாலா் என்றால், ரஷியாவின் மிக உயா்ந்த கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 60 டாலா் மட்டுமே.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் எண்ணெய் நிறுவனங்கள் 52% முதல் 168% வரை ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியின் மூலம் தங்களது லாபத்தை அதிகரித்திருக்கின்றன. அந்த லாபத்தின் மீது அரசு சிறப்பு வரி விதித்ததைக் குறிப்பிட வேண்டும்.

அதனால், சமையல் எரிவாயு உருளையின் விலை குறைப்புக்கான அதே காரணத்துக்காக பெட்ரோல், டீசல் விலையும் குறைக்கப்பட வேண்டும். அப்படி விலை குறைக்கப்படும்போது தங்களது மாநில வரியை உயா்த்தி அதன் பயனை மக்களிடமிருந்து அரசுகள் பறித்துக்கொள்ள அனுமதிக்கவும் கூடாது.

அரசின் எந்த ஒரு முடிவுக்குப் பின்னாலும் அரசியல் காரணங்கள் இருப்பதைத் தவிா்க்க முடியாது. இலவசங்களும் மானியங்களும் இன்றைய அரசியலில், சரியோ தவறோ, இன்றியமையாதவை ஆகிவிட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.