தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தோற்குதம்மா மானுடம்!

எங்கள் சிறுமிகளை மீட்டுவாருங்கள். இந்த ஒரே கோரிக்கையை வலியுறுத்தி மீச்செல் ஒபாமா, மலாலா உள்பட பல்வேறு நாடுகளிலும் பெண்கள் போராடி வந்தபோதிலும், நைஜீரியாவில், "பொகோ ஹராம்' எனும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தால் ஏப்ரல் 14ஆம் தேதி கடத்தப்பட்ட 223 வளர்இளம் பருவ மாணவிகள் இன்றுவரை மீட்கப்படவில்லை.

Updated On :18 மே 2014, 8:11 pm

எங்கள் சிறுமிகளை மீட்டுவாருங்கள். இந்த ஒரே கோரிக்கையை வலியுறுத்தி மீச்செல் ஒபாமா, மலாலா உள்பட பல்வேறு நாடுகளிலும் பெண்கள் போராடி வந்தபோதிலும், நைஜீரியாவில், "பொகோ ஹராம்' எனும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தால் ஏப்ரல் 14ஆம் தேதி கடத்தப்பட்ட 223 வளர்இளம் பருவ மாணவிகள் இன்றுவரை மீட்கப்படவில்லை.

சில தினங்களுக்கு முன்பு, இந்த மீட்பு நடவடிக்கைக்கு உதவிட அமெரிக்கா முன்வந்தது. செயற்கைக்கோள் மூலமும் ஆளில்லா விமானங்கள் மூலமும் மாணவிகளைத் தேடியபோதிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.

தற்போது பாரீசில் நடைபெற்ற கூட்டத்தில், மாணவிகள் மீட்புக்கு ஒத்துழைப்பு அளிக்க ஆப்பிரிக்க நாடுகள் உறுதிகூறியுள்ளன.

இந்த அவலநிலைக்குக் காரணம் நைஜீரிய அரசுதான். தொடக்கத்திலிருந்தே உண்மையை மூடி மறைத்தது. கடத்தப்பட்ட மாணவிகள் 10 பேர் என்றது. ஆனால் தப்பி வந்த 53 மாணவிகள் சொன்ன கதைகள் நைஜீரிய அரசின் அனைத்து வாதங்களையும் பொய்யாக்கின. தங்கள் குழந்தைகளைத் தேடி, அவர்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் சாம்பிஸபா அடர்வனப் பகுதியில் பெற்றோர் பலர் கண்ணீருடன் தனித்தனியே தேடினர்; பயனில்லை. காடுகளில் நைஜீரிய காவலர்கள் ஒருவரைக்கூட பார்க்க முடியவில்லை என்ற துயரத்தையும் வெளிப்படுத்தினர்.

பள்ளிகள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருவதால் போர்நோ, யூபி போன்ற மாவட்டங்களில் பள்ளிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக நைஜீரிய அரசு கூறியது அப்பட்டமான பொய் என்பது அம்பலமானது. சிபோக் நகரில் கடத்தப்பட்ட இந்த மாணவிகள் ஒரு பள்ளி விடுதியில் இருந்தவர்கள். நள்ளிரவில் இந்த விடுதிக்கு வந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள், இவர்களை துப்பாக்கி முனையில் லாரிகளில் ஏற்றிச் சென்றனர்.

பொகோ ஹராம் அமைப்பு வெளியிட்டுள்ள விடியோ காட்சியில், "இவர்களை விடுவிக்க, சிறைகளில் வாடும் பொகோ ஹராம் உறுப்பினர்களை அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இவ்வாறு, பிணைக்கைதிகளாக பிடிக்கப்படும் மாணவ, மாணவிகளுக்காக சிறைக்கைதிகள் விடுவிக்கப்படுவது நைஜீரியாவில் புதியதல்ல. தற்போது கடத்தப்பட்டவர்கள் அனைவரும் மாணவிகள் என்பதும், இவர்கள் இந்த இயக்கத்தின் ஆடவர்களுக்கு போகப் பொருளாக மாற்றப்படுவார்கள் அல்லது மணமுடிக்கப்படுவார்கள் என்ற அச்சமும் வேதனையும் பெற்றோர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

நைஜீரிய பழங்குடியினரான இக்போ மற்றும் ஹவுசா பிரிவினருக்கு தனித்தனி மொழிகள் இருப்பினும், பள்ளிகளில் ஆங்கிலம்தான் பயிற்றுமொழி. பள்ளி, கல்லூரிகள் பெரும்பான்மையும் கிறிஸ்துவ மிஸன்கள் அமைத்தவை. 2002இல் நபிகளின் போதனையைப் பரப்புரை செய்வோர் என்ற பெயரில் தொடங்கப்பட்ட அமைப்பு, ஆங்கில வழிக் கல்வி நிறுவனங்களுக்கு எதிராகவும், பெண்கள் பள்ளிசென்று கற்கக்கூடாது என்றும் போராடியதால் பொகோ ஹராம் (இதற்குப் பொருள்: மேலைக் கல்விக்குத் தடை) என்ற பெயரைப் பெற்றது.

கல்வி நிறுவனங்களுக்கு எதிரானது பொகோ ஹராம் என்பது தொடக்கத்திலேயே அரசுக்கு தெரியும். தெரிந்தும் கல்வி நிறுவனங்களுக்கு அதிக பாதுகாப்பு அளிப்பது குறித்தும், கல்வி நிறுவனங்கள் ஆங்காங்கே சிதறி இருக்காமல், நகரத்தின் மையத்தில் அமைக்கவும் நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். அத்தகைய நடவடிக்கைகள் எதையும் நைஜீரிய அரசு மேற்கொள்ளவில்லை. மிகச் சிறிய அளவில் நடைபெற்ற இந்த கடத்தல் மற்றும் தாக்குதல், இப்போது 223 மாணவிகளில் வந்து முடிந்திருக்கிறது.

இப்போது நைஜீரியாவில் பெண்களை பள்ளி கல்லூரிக்கு அனுப்பத் தயங்கும் அச்சமான சூழ்நிலை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்பது மிகமிக அவலமான நிலை. இத்தகைய அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் பொகோ ஹராம் அமைப்பின் விருப்பம். இப்போது அது முழு அளவில் நடந்தேறியிருக்கிறது.

பெண் கல்விக்கு ஆதரவு தெரிவித்த பாகிஸ்தான் சிறுமி மலாலா ஆப்கான் தீவிரவாதிகளால் சுடப்பட்டபோது உலகமே அவரைப் பாராட்டியது; விருதுகள் கொடுத்தது. இப்போது பெண்கல்விக்கு எதிராக மாணவிகள் கடத்தப்பட்டு, போகப்பொருளாக மாற்றப்படும் சூழல். ஆனால் உலகம் இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.

அங்கே இந்த மாணவிகளின் பெற்றோர், பள்ளிக்கு அனுப்பியதற்காக அழுது கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி நாம் கவலைப்படாமல் இருக்கிறோமே, அது என்ன நியாயம்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.