வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

கருப்புப் பணமும் கள்ள நோட்டும்!

இந்திய ரிசர்வ் வங்கி 2005ஆம் ஆண்டுக்கு முன்னால் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு புழக்கத்திலிருந்து அகற்றிவிடத் தீர்மானித்திருக்கிறது. ஏப்ரல் முதல் தேதியிலிருந்து 2005க்கு முற்பட்ட நோட்டுகளை வங்கிகளில் சென்று மாற்றிக் கொள்ளலாம்.

Updated On :6 பிப்ரவரி 2014, 8:02 pm

இந்திய ரிசர்வ் வங்கி 2005ஆம் ஆண்டுக்கு முன்னால் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை மார்ச் 31ஆம் தேதிக்குப் பிறகு புழக்கத்திலிருந்து அகற்றிவிடத் தீர்மானித்திருக்கிறது. ஏப்ரல் முதல் தேதியிலிருந்து 2005க்கு முற்பட்ட நோட்டுகளை வங்கிகளில் சென்று மாற்றிக் கொள்ளலாம். அதுவும் இரண்டு மாதங்களுக்குள். அதற்குப் பிறகு பத்துக்கும் மேற்பட்ட ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதாக இருந்தால், தங்களது அடையாள அட்டையைக் காட்டியாக வேண்டும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு, புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளை செல்லாததாக்கவா இல்லை பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை வெளிக்கொணரவா என்று பரவலான விவாதப் பொருளாகி இருக்கிறது. கணக்கில் காட்டப்படாத கருப்புப் பணமாக இருந்தால், அது புழக்கத்திற்கு வந்தாக வேண்டும். இல்லையென்றால் அது செல்லாக்காசாகி விடும்.

2005க்கு முற்பட்ட ரூபாய் நோட்டுக்கள், கருப்புப் பணமாக பதுக்கப்பட்டிருந்தால், இந்தக் குறுகிய காலத்தில் அவை செலவழிக்கப்படுமா இல்லை வங்கிகளில் மாற்றப்படுமா என்பது சர்ச்சைக்குரிய விஷயம். எதுவாக இருந்தாலும் மறைமுகமாக செய்யக்கூடிய செயல் அல்ல அது. அப்படியே பெரிய அளவில் கருப்புப் பணம் செலவழிக்கப்பட்டாலும் ரிசர்வ் வங்கி அதற்காகக் கவலைப்படாது. காரணம், இந்த நடவடிக்கையின் நோக்கமே, பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் முறையான புழக்கத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான்.

அது ஏன் 2005க்கு முற்பட்ட ரூபாய் நோட்டுகள் புழக்கத்திலிருந்து அகற்றப்படுகின்றன என்று கேட்கலாம். 2005க்குப் பிறகு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் பிரத்யேகமான பாதுகாப்புக் குறியீடுகள் சில இணைக்கப்பட்டிருக்கின்றன. பழைய ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகள் அதிகமாகக் காணப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு எழுந்ததன் பின்னணியில்தான் இப்படியொரு முடிவை ரிசர்வ் வங்கி எடுத்திருக்கிறது என்று கருத வாய்ப்பிருக்கிறது.

பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும், நோட்டுகளின் தனித்தன்மையை உறுதிப்படுத்தும் தயாரிப்பு முறையையும் கடைப்பிடித்தும்கூட கள்ள நோட்டுப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இத்தனைக்கும் ரூபாய் நோட்டின் எழுத்து, வடிவமைப்பு போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி, போலிகள் உருவாகிவிடாமல் பாதுகாக்க எல்லா நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அப்படியும் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுகின்றன என்றால், அதற்குக் காரணம் ரிசர்வ் வங்கியின் மெத்தனமல்ல, கள்ள நோட்டு அடிப்பவர்களின் புத்திசாலித்தனம்தான்.

இந்த கள்ள நோட்டுகள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு இந்தியாவில் பரவலாக விநியோகிக்கப்படுகின்றன என்பது ஊரறிந்த ரகசியம். இந்த இழிசெயலை பாகிஸ்தான் அரசே செய்கிறதா இல்லை பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தீவிரவாத இயக்கங்கள் செய்கின்றனவா என்பதை அறுதியிட்டுக் கூறிவிட முடியவில்லை. பாகிஸ்தான் அரசும் அதன் ஆசியுடன் செயல்படும் தீவிரவாத அமைப்புகளும் இந்த விஷயத்தில் கைகோத்து செயல்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

பாகிஸ்தான் அரசுக்கும், அங்கிருந்து இயங்கும் தீவிரவாத இயக்கங்களுக்கும் இடையேயான உறவு எத்தகையது என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அணு ஆயுத வல்லரசாகி விட்டிருக்கும் பாகிஸ்தான் மீது போர் தொடுப்பது என்பது சாத்தியமுமில்லை. அந்த நிலையில் பாகிஸ்தான் தரும் இதுபோன்ற தொந்தரவுகளை எதிர் கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. அதனால், கள்ள நோட்டுகளை புழக்கத்திலிருந்து அகற்ற வேண்டுமானால், ரிசர்வ் வங்கி எடுத்திருப்பதுபோல சில நடவடிக்கைகளை மேற்கொண்டாக வேண்டும்.

கடந்த டிசம்பர் 31, 2004 வரை வெளியிடப்பட்டு புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களின் மொத்த மதிப்பு சுமார் மூன்று லட்சத்து 43 ஆயிரம் கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் கெடு முடிவதற்குள் இந்த அளவுக்குப் பணத்தை அச்சடித்து வங்கிகளுக்குக் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் ரிசர்வ் வங்கிக்கு உண்டு.

இந்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் முற்றிலுமாக கருப்புப் பணம் வெளிக்கொணரப்படும் என்றோ, கள்ள நோட்டுகள் அகற்றப்படும் என்றோ சொல்லிவிட முடியாது. ஆனால், நிச்சயமாக கணிசமான கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகள் புழக்கத்துக்கு வரும் அல்லது செயலிழக்கும். அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால், நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் கள்ளப் பணத்தின் - கருப்புப் பணத்தின் பங்களிப்பு கணிசமாகக் கட்டுப்படுத்தப்படும். அது நல்லதுதானே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.