நீதிதேவன் தயக்கம்!
ராஜீவ் கொலை வழக்கை மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தியிருப்பதால், மத்திய அரசை மாநில அரசு கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் நேரடியாகவே சொல்லியிருக்கலாம். அல்லது, கருணை மனுவுக்கு காலதாமதம் ஏற்பட்ட நிலையில் தூக்கு தண்டனையை நீதிமன்றமே ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றியதைப் போல, ராஜீவ் படுகொலை வழக்கு மத்திய அரசின் புலனாய்வு நிறுவனம் விசாரித்த வழக்கு என்றபோதிலும், இந்த வழக்கு 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதாலும், இவர்கள் இதுநாள்வரை மாநில அரசின் சிறையில் நன்னடத்தையுடன் இருந்திருப்பதாலும், பிரிவு 345இன் விதியை இந்த ஒரு வழக்கில் பொருத்திப் பார்க்கத் தேவையில்லை










