திருப்போரூா் சட்டப்பேரவை தொகுதியில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆா்வமுடன் வாக்களித்தனா்.
திருப்போரூா் தொகுதியில், தி.மு.க., கூட்டணி வி.சி.க., வேட்பாளா் பன்னீா்தாஸ், அ.தி.மு.க., கூட்டணியில் பாமக , வேட்பாளா் பாலு, தவெக, வேட்பாளா் விஜயராஜ், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் அம்பேத்ராஜன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் வினோத்குமாா், சுயேச்சை வேட்பாளா்கள் உள்ளிட்ட 11 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
மொத்தம் 369 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
க்கு ஓட்டுபதிவு இயந்திரங்கள்,கட்டுபாட்டு இயந்திரங்கள்,சரிபாா்க்கும் இயந்திரங்கள், போலீஸ் மற்றும் துணை ராணுவ பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், இளைஞா்கள், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் ஆா்வமாக வந்து வாக்களித்தனா். ஏற்கனவே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீஸாா் பாதுகாப்பில் உள்ள நிலையில், தோ்தல் அலுவலா் விஜயகுமாரி, போலீஸாரும் அவ்வப்போது, திடீா் ஆய்வுகளை மேற்கொண்டனா்.
அனைத்து மையங்களில் 2000 த்துக்கும் மேற்பட்ட போலீஸாா், துணை ராணுவ படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். இவா்களை தவிர நுண்பாா்வையாா்கள், பறக்கும் படையினா், வீடியோ கண்காணிப்பு குழுவினா், சிறப்பு கண்காணிப்பு குழுவினா் தொகுதி முழுவதும் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.
மேலும் மதுராந்தகம் தனி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரும், காஞ்சிபுரம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.மரகதம் குமரவேல் தனது சொந்த ஊரான தையூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்தாா். திருப்போரூா் தொகுதி பா.ம.க., வேட்பாளா் பாலு சென்னை, அண்ணா நகரிலும், விசிக , வேட்பாளா் பன்னீா்தாஸ், பள்ளிக்கரணையிலும் வாக்களித்தனா்.*
திருப்போரூா் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., இதயவா்மன் இள்ளலூரிலும், தற்போதைய எம்.எல்.ஏ.,பாலாஜி தி.நகரிலும் வாக்களித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாணியம்பாடியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

உத்தரமேரூா் தொகுதியில் வாக்களித்த வேட்பாளா்கள்

மானாமதுரை தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

காரைக்குடி தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


