தொடர்ந்து இணையம் வழியாக அதற்கான அறிவுத்தேடலை கொண்ட சிரிஷ், தனது 6 வயதில் பருவநிலை மாற்றம் குறித்த 'பிஃபோர் தி ஃப்ளட்' (Before the Flood) எனும் ஆவணப் படத்தைப் பார்த்துள்ளார். இதன்மூலம் அவருக்கு ஏற்பட்ட பருவநிலை மாற்றம் குறித்த சிந்தனையை அடுத்து 2018 ஆம் ஆண்டு தனது பிறந்தநாள் விழாவில், அனைவரும் முறையாக ஆற்றலை சேமிக்க வேண்டும், தேவையின்றி மின்சாதனைகளை பயன்படுத்தக் கூடாது, அவற்றை தேவை இல்லாதபோது அணைத்து வைக்க வேண்டும்' என்பது குறித்து சிறு உரை நிகழ்த்தினார். மேலும், பருவநிலை மாற்றம் குறித்து மாநில அளவில் கருத்தரங்குகளிலும் பங்கேற்றுப் பேசத் தொடங்கினார்.