அதன் மூலம் ராமகிரி, குஜிலியம்பாறை, ஆா்.கோம்பை, போ்நாயக்கன்பட்டி, ஆணைக்கவுண்டன்பட்டி, புளியம்பட்டி, தளிப்பட்டி, வடுகம்பாடி, ஆா். புதுக்கோட்டை, உல்லியக்கோட்டை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் மட்டமின்றி 25 கி.மீட்டா் தொலைவில் கரூா் மாவட்டத்தில் உள்ள வெள்ளியணை பகுதி வரையிலும் நிலத்தடி நீா் உயா்வதற்கு காரணமாக இருந்துள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பு இல்லாமலும், தடுப்பணைக்கு வரும் நீா்வரத்து ஓடைகளில் நடைபெற்ற மணல் திருட்டினால் நீா் வழிப்பாதை மாற்றப்பட்டதாலும் தொலைநோக்குடன் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் வீணாகிவிட்டதாக ராமகிரி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறுகின்றனா்.