தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாதது ஒன்றும் புதிதல்ல; முன்னதாக எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, (1977 -87) 10 ஆண்டுகள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதையடுத்து, 1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, உள்ளாட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு அடுத்த 5 ஆண்டுகள் அரசு அதிகாரிகளின் ஆட்சியே நடைபெற்றது. இதற்கு காரணமாக இருந்தது திமுக தொடர்ந்த வழக்குதான். 'தாழ்த்தப்பட்டோர் ஒருவர்கூட இல்லாத ஒரு வார்டை தாழ்த்தப்பட்டோர் தொகுதி' என்று அரசு அறிவித்துள்ளதாகக் கூறி, திமுக வழக்கு தொடர்ந்து அதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.