“வேறொரு நபரின் மனைவி என்று தெரிந்திருந்தும், அந்தப் பெண்ணின் கணவரின் சம்மதம் இல்லாமல் அல்லது அவர் நீக்குப்போக்காக அறியும் வகையில், அந்தப் பெண்ணுடன் ஒரு ஆண் உடலுறவு கொள்வது என்பது, பாலியல் வன்கொடுமைக்கு ஈடானது அல்ல என்றபோதிலும், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு என்றும், அது தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படும். அதன்படி, குற்றச் சாட்டப்பட்ட ஆணுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இந்த விஷயத்தில், அந்தப் பெண் (வேறொருவரின் மனைவி) தவறுக்கு உடந்தையாக இருந்தார் என்பதற்காக அவரைத் தண்டிக்க இயலாது”.