பார்க் போன்ற திறந்த வெளி திடல்களில் பட்டாம் பூச்சிகளாய் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும். புத்தக மூட்டை சுமந்தே அயர்சியாகி விடும் இன்றைய குழந்தைகளுக்கு விளையாட்டைப் பற்றி யோசிக்க நேரமின்றி டியூசன், மியூசிக் கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ், பள்ளிகளில் எக்ஸ்ட்ராவாக அளிக்கப் படும் பிராஜக்டுகள், ஆக்டிவிட்டிகள், என்று செய்து முடிக்க அடுத்தடுத்து பல வேலைகள் காத்திருக்கின்றன. மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்ட இப்படியான கல்வி முறையில் ரிலாக்ஸ் செய்து கொள்ள என்ன இருக்கிறது குழந்தைகளுக்கு?. திறமைகள் மலிந்த இந்த போட்டி உலகில் அரசின் கல்வி முறையை நாம் குற்றம் சொல்ல முடியாது மாறாக இத்தனை வேலைப் பளுவையும் தாண்டி நம் குழந்தைகளின் மனதை சோர்வோ ,வெறுமையோ நெருங்காமல் எல்லாவற்றையும் எளிதாகக் கடந்து செல்ல அவர்களை பழக்குவது வீட்டில் பெற்றோர்கள் மற்றும் பள்ளியில் ஆசிரியர்களின் தலையாய கடமை அல்லவா !