‘திருமணமெல்லாம் ஏக தடபுடலாகத்தான் நடந்தது. மணப்பெண்ணுக்கு கிலோ கணக்கில் நகை, சீர்வரிசையாக வெள்ளி, வெண்கல எவர்சில்வர் பாத்திரங்கள். தவிர தேக்குக் கட்டில், தேக்கு பீரோ, ஒனிடா கலர் டி.வி, ஃபிரிஜ், மாப்பிள்ளைக்கு புல்லட், புலிநகச் செயின் என்று அன்னத்தாய் தன் மகளுக்கு டாம்பீகமாகச் செலவழித்து திருமணம் நடத்தியிருந்தார். மாப்பிள்ளையும், பெண்ணும் கல்யாணக் கோலத்தில் கண்ணுக்கு ரொம்ப லட்சணமாகத்தான் இருந்தார்கள். யார் கண் பட்டதோ தெரியவில்லை, இத்தனை செலவழித்து நடத்தப்பட்ட கல்யாணம், அன்று ராத்திரி தாண்டுவதற்குள் ரத்தாகிவிட்டது’ என்றார்.