இவர், 1904 ஆம் வருடம், அதாவது இந்திய சுதந்திரத்துக்கு முன்பு கர்நாடக மாநிலம், சிமோகாவில் உள்ள குப்பலி என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது செல்லப் பெயர் குவெம்பு. அந்நாட்களில் அவர் மிகச்சிறந்த நாவலாசிரியராகவும், கவிஞராகவும், விமர்சகராகவும், உரைநடை ஆசிரியராகவும் புகழ்பெற்றவராக இருந்து வந்தார். இங்கே தமிழ்நாட்டில் மகாகவி பாரதியார் எப்படியோ அப்படி கர்நாடகத்தின் தேசிய கவியாக (ராஷ்டிர கவி) வைத்துப் போற்றப்பட்டவர் குவெம்பு, அவருக்கு அப்படியொரு பட்டத்தை கர்நாடக அரசு 1958 ஆம் ஆண்டு அளித்து கெளரவித்தது. அது மட்டுமல்ல, அவர் இறப்பதற்கு 2 வருடங்களுக்கு முன்பு ‘கர்நாடக ரத்னா’ என்ற விருதையும் கன்னட அரசு அவருக்கு அளித்துப் பெருமை கொண்டது.