இதைப்பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ரவின், தனது தாய் தந்தையர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது உண்மைதான், ஆனால் அவர்கள் 1968-ம் ஆண்டே அமெரிக்காவிற்கு வந்துவிட்டனர், தான் பிறந்ததே அமெரிக்காவில்தான் என்பதால் தன்னை எங்கே திரும்பி செல்லச் சொல்கிறார் இந்தப் பெண் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் “இந்த ஒலிப் பதிவை கேட்டவுடன் முதலில் நானும் அதிர்ச்சி அடைந்தேன், ஆனால், இப்போது இதைக் கேட்டால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவில்லை, எந்த வகையில் பார்த்தாலும் நானும் அமெரிக்க பிரஜைதான். தலைமுறைகளாகப் புலம்பெயர்ந்தோரும் அந்த நாட்டின் குடிமகன் என்பதை மறுக்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.