ஞாயிறு மதியம் ஒரு நிகழ்ச்சி அதுவும் பத்திரிகையாளர்களுக்கு என்ற போது வியப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்கள் பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலகம் என்றபோது வியப்பு அதிகமானது. காரணம் இதுவொரு ஆன்மிக நிகழ்ச்சியாக இருக்குமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் ஓர் உலகம் தழுவிய தன்னார்வ ஆன்மிகத் தொண்டு நிறுவனம். ராஜஸ்தானில் உள்ள அபு மலையில் இந்த அமைப்பினரின் அகில உலக தலைமையம் செயல்பட்டு வருகிறது. 137 நாடுகளில் 9500 கிளை நிலையங்களோடு உலக அமைதிக்கான சமூக ஆன்மிகச் சேவை செய்து வருகிறது பிரம்மாகுமாரிகள் அமைப்பு.
சுய முன்னேற்றம், நேர்மறை சிந்தனைகள், மன அழுத்தத்தில் இருந்து விடுபடுதல் முதலானவற்றில் பயிற்சி மற்றும் தியான வகுப்புகளை நடத்துகின்றது இந்த அமைப்பு. அனைவருமே இலவசமாக இந்த சேவை வழங்கப்படுகிறது.
இதன் ஐரோப்பிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் இயக்குனர் ராஜயோகினி பிரம்மாகுமாரி சகோதரி ஜெயந்தி அவர்கள் 3 நாள் சுற்றுப் பயணமாக சென்னை வந்துள்ளார். சிறு வயது முதலே ஆன்மிக நாட்டம் கொண்ட இவர் தனது 17 வயது முதல் இந்த அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு மனித குல சேவை ஆற்றி வருகிறார். இவர் ஐக்கிய நாடுகள் சபையில் பிரம்மாகுமாரிகள் அமைப்பின் சார்பில் பிரதிநிதியாக உள்ளார். அவர் தான் பத்திரிகையாளர்களிடம் சிறப்புரை ஆற்றப்போகிறார் என்று தெரிந்ததும் பேச்சினைக் கேட்க ஆர்வமாகக் காத்திருந்தோம். ஆரம்பத்தில் இது ஒரு தியான நிகழ்வாக இருக்கலாம் என்ற நினைத்தபடி தான் நிகழ்ச்சிக்குச் சென்றோம். ஆனால் முற்றிலும் வித்தியாசமான மனநிலையில் திரும்பியது மன நிறைவைத் தந்தது. ஊடகத் துறையினருக்கான இந்தச் சிறப்புக் கலந்தாய்வில் தலைமை தாங்கி சகோதரி ஜெயந்தி கூறியது -
‘உலகில் வானிலை மாற்றத்தைப் பற்றி பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் ஒரு சிறந்த உதாரணமாகும். மனிதர்கள் இயற்கையிலிருந்து விலகிச் செல்கிறார்கள். இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை வாழ மறுக்கிறார்கள். மனிதர்கள் காடுகளை தமக்கு வருமானம் தரும் மரங்களாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அதுதான் ஆக்சிஜன் தரும் இயற்கையின் பொக்கிஷம் என பார்க்கத் தவறுகின்றனர். அது போல மனிதர்கள் ஒருவருக்கொருவர் மதிப்புக் கொடுக்கத் தவறுகின்றனர். தனக்குள் இருக்கும் பொக்கிஷங்களை (திறமைகளை) பற்றியும் சிந்திக்கத் தவறிவிட்டனர். தன்னுடைய மதிப்பை தானே உணர மறந்து விட்டனர்.
உலகின் பொருளாதாரம் முன்னேறி விட்டதாக மனிதர்க்ள் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இந்த மண்ணின் அனைத்து பொக்கிஷங்களும் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன.
ஊழல் மற்றொரு பயமுறுத்தல் அடிமைத்தனம் – மனிதர்கள் போதை, புகை, பேராசை, பொறாமை போன்றவற்றிற்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். போதைப் பழக்கத்திற்உ அடிமைப்பட்டுள்ள எண்ணற்றவர்களில் தியானப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு ஒரு வாரத்தில் 75 சதவிகிதம் விடுபட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் ஓங்கியிருக்கும் அதர்மத்திற்கு ஆன்மிகமே சரியான பதிலாக இருக்கும். மனிதர்கள் தமக்குள் இருக்கும் அந்தராத்மாவுடனான தொடர்பை இணைக்கத் தவறி விட்டனர். தியானம் தனக்குள் இருக்கும் தன் உள்ளார்ந்த சக்தியை வெளிப்படுத்தும் ஒரு கருவியாக உதவுகிறது.’
சகோதரி ஜெயந்தி தலைமையில் இந்த நிகழ்ச்சி பத்திரிகையாளர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பிரதமா் மோடி உரை: இஸ்ரேல் எதிா்க்கட்சியினா் புறக்கணிப்பு?
ரயிலில் பயணியிடம் மடிக்கணினி திருடியவா் கைது

தெலங்கானா: முக்கிய மாவோயிஸ்ட் தலைவா் தேவ்ஜி போலீஸில் சரண்

முதல்வா் நாளை குமரி வருகை
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

