டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

மீண்டும் மேகி நூடுல்ஸ்!

கடந்த ஜூன் மாதம் சுவிஸ் நிறுவனமான நெஸ்லேயின் தயாரிப்பான மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டது

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:08 pm

உமா ஷக்தி.

கடந்த 2015 ஜூன் மாதம் சுவிஸ் நிறுவனமான நெஸ்லேயின் தயாரிப்பான மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.  103 ஆண்டுகளாக இந்தியாவில் விற்பனையில் சாதனைகள் செய்து வரும் நெஸ்லே நிறுவனத்தின் தரக் கோட்பாடுகள் நுகர்வோர் மனத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து நெஸ்லே அரும்பாடுபட்டு தடைகளை வென்றெடுத்து தற்போது மீண்டு வந்துள்ளது. இது எப்படி சாத்தியம்? மேகி புதுப்பொலிவுடன் எப்படி திரும்ப வந்தது? வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைத் திரும்பப் பெறுமா போன்ற கேள்விகளுடன் நெஸ்லே நிறுவனத்தின் அழைப்பின் பேரில் மைசூர் நஞ்சன்கூடில் உள்ள மேகி தொழிற்சாலைக்கு சென்றோம். அங்கு நேரடியாக நெஸ்லே தொழிற்சாலையில் மேகி நூடுல்ஸ் தயாரிக்கப்படும் விதத்தைப் பார்த்தோம். இப்போது என்றல்ல எப்போதுமே காண்பவற்றை தான் நாம் கருத்தில் கொள்வோம் (Seeing is believing) அவ்வகையில் மேகி நூடுல்ஸ் தயாரிப்பு நிலைகளை ஆ- விலிருந்து ஃ வரை நேரில் பார்த்த போது நூறு சதவிகிதம் பாதுகாப்பான முறையில் மேகி நூடுல்ஸ் தயாரிக்கப்படுவதை கண்டறிந்தோம். நிச்சயம் மேகி நூடுல்ஸின் மீள் வருகை அதன் ரசிகர்களை முழுத் திருப்திபடுத்தும் என்பது உண்மை. நுகர்வோரின் மனங்களில் மேகி நூடுல்ஸைப் பற்றி முன்பு எழுந்த சந்தேகங்களை தொழிற்சாலை நிர்வாகிகளிடம் கேட்டபோது மேகியைப் போல சுவையான தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.

மோனோ சோடியம் க்ளூடாமேட் (MSG) மற்றும் க்ளூடாமேட் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

புரதச் சத்தில் உள்ள முக்கியமான அமிலங்களில் எல் க்ளூடாமேட் எனும் அமினோ ஆசிட் மிகவும் முக்கியமானது. அது புரதம் அதிகமுள்ள அனைத்து உணவுப் பொருட்களிலும் உள்ளீடாக இருக்கிறது.  பால், பாலாடைக்கட்டி, காளான், மீன், மாமிசம் மற்றும் சில காய்கறிகளிலும் கூட அவை இருக்கிறது. ஒவ்வொரு உணவுப் பொருளிலும் அதன் அளவு வித்தியாசம் காணப்படும். ஆனால் தக்காளி, காளான் மற்றும் சோயா, மீன் உணவுகளில் அது அதிகம் உள்ளது. மோனோ சோடியம் க்ளூடாமேட் (MSG) பொருத்தவரையில் இது கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானிய விஞ்ஞானி கிகுநே ஐகெடா (Kikunae Ikeda) என்பவரால்  கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தனித்தன்மையான சுவையை முன்வைத்து இதற்கு ‘யுமாமி’ (Umami) என்று பெயரிடப்பட்டது. உப்பு, இனிப்பு, புளிப்பு மற்றும் கசப்புச் சுவைகளைத் தவிர ஐந்தாவதாக உள்ள சுவைதான் இந்த MSG. இதனை இயற்கையான வழிமுறையில் ஃபெர்மண்ட் செய்து தயாரிக்க முடியும். பியர், வினிகர் மற்றும் யோகர்ட் தயாரிப்பில் இதைப் பயன்படுத்துவார்கள். இந்த க்ளூடாமேட் எந்த அளவு பயன்படுத்தலாம் என்பதை ப்உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு (FSSAI) 2016  மார்ச் 31ம் தேதி வெளியிட்டது.  அதன்படி க்ளூடாமேட் பால், மசாலா பொருட்கள், கோதுமை, காய்கறிகள் என சில உணவுப் பொருட்களில் இயற்கையாகவே உள்ளது என்பதைப் பதிவு செய்துள்ளது.  MSG என்பது க்ளூடாமிக் ஆசிடின் சோடியம் உப்பு, க்ளூடாமேட்டின் பல வடிவங்களில் ஒன்று தான் அது. CFTRI மற்றும் FSSAI ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்த MSG யின் குறிப்பிட்ட அளவுகோலை இதுவரை நிர்ணயிக்கவில்லை. இதை அந்தந்த உணவுத் தயாரிப்பாளர்களின் மனசாட்சிக்கே விட்டுவிட்டனர். இதை Good Manufacturing Practices என்று சொல்வார்கள். நெஸ்லேயைப் பொருத்தவரையில் நாங்கள் அதை சரியான முறையில் பயன்படுத்துகிறோம். எங்களுடைய தயாரிப்பான மேகி நூடுல்ஸில் இயற்கையாகத் தோன்றும் க்ளூடாமிக் ஆசிட்டை மட்டும் தான் அனுமதிக்கிறோம், கூடுதல் சேர்க்கையாக MSG யை பயன்படுத்துவது இல்லை. அடிடிவான இந்த MSG பயன்பாட்டை நாங்கள் குறைப்பதும் இல்லை அதே சமயம் கூட்டுவதும் இல்லை, இயற்கையாக கிடைப்பதை அப்படியே தக்க வைத்துக் கொள்கிறோம். இது தான் உண்மை.

Story image

மேகி  சாப்பிடுவதால் ஆரோக்கியத்துக்கு பிரச்னையா? அனுமதிக்கப்பட்ட அளவை விட காரீயம் மற்றும் ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் இன்னும் அதில் உள்ளதா?

நிச்சயம் இல்லை. ஆரோக்கியமும் பாதுகாப்பும் தான் எங்களுடைய தாரக மந்திரம். அதனால் தான் உலகம் முழுவதும் 150 வருட காலமாக மக்கள் எங்களுடைய உணவுப் பொருட்களை விரும்பி பயன்படுத்துகிறார்கள். அதிலும் இந்தியாவைப் பொருத்தவரையில் கடந்த 103 வருடங்களாக வெற்றிகரமாக நாங்கள் இயங்கி வருகிறோம். மேகி இந்திய மக்களின் பிரியமான உணவாக கடந்த 33 ஆண்டுகாலம் இருந்து வந்துள்ளது. இதை எல்லாம் கணக்கில் வைத்து, நுகர்வோரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர்களின் நன்மதிப்பை என்றென்றும் தக்க வைத்துக் கொள்ள மேகி நூடுல்ஸை கடந்த நவம்பர் மாதம் முதல் மீண்டும் சந்தைக்கு எடுத்து வந்துள்ளோம். மிக உறுதியாகச் சொல்லலாம் எங்கள் தயாரிப்புக்களில் பிரதானமாகப் பின்பற்றப்படும் விஷயம் நுகர்வோர் பாதுகாப்பு. மேகி சர்ச்சைக்குப் பின்னர் 3500 சாம்பிள்கள் தனியார் மற்றும் நெஸ்லே பரிசோதனை மையங்களில் தர நிர்ணயச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்க, ஐரோப்பா மற்றும் சிங்கப்பூரிலிருந்து சிறப்பு நிபுணர்க் குழு பரிசோதித்து அதன்பின் மேகி நூடுல்ஸின் தரம் மிகச் சரியாக உள்ளது என உறுதிப்படுத்தினார்கள். அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே காரியம் சேர்க்கப்பட்டுள்ளது என்ற உண்மை உலகத்துக்கு புரிந்தது. இதோ மீண்டும் மேகி நூடுல்ஸ் புதுப் பொலிவுடன் புத்தம் புதிய சுவைகளுடன் வெளிவந்துள்ளது. நல்லவை எது அல்லாதவை எதுவென்று சுவைத்தவர்கள் எளிதில் கூறிவிடுவார்கள். எங்கள் புது மேகி நூடுல்ஸ் ஃபேளவர்கள் மீண்டும் அனைவரின் இதயங்களிலும் இடம் பெறும் என்று உறுதியாக நம்புகிறோம்.

தற்போது வெளிவந்துள்ள புதிய மேகி ஃபேளவர்கள் என்னனென்ன? அவற்றில் காரீயம் சேர்க்கப்பட்டுள்ளதா?

Story image

ஏற்கனவே சந்தையில் மேகி க்ளாசிக் மசாலா, டொமேடோ, சிக்கன், மேகி ஆட்டா நூடுல்ஸ் கிடைக்கின்றன. இவற்றுடன் நான்கு புதிய ஃப்ளேவர்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். அவை பெரி பெரி, பார்பிக்யூ பெப்பர், சில்லி சிக்கன் மற்றும் க்ரீன் சில்லி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிச் சுவையில் உண்போரின் விருப்பத்திற்கேற்ப காரம் தான் சேர்க்கப்பட்டுள்ளது, காரீயம் அல்ல.

காரீயத்தைப் பொருத்தவரையில் அது நம் மண்ணில் உள்ளது, காற்றில் தூசியில் என பல இடங்களில் நிறைந்துள்ளது. மேகி மசாலாவில் சேர்க்கப்படும் பொருட்களில் மிகக் குறைந்த அளவு காரீயம் இருக்கும் மசாலாக்களையே நாங்கள் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்கிறோம். மேலும் ‘தி கொடெக்ஸ் அலிமெண்டேரியஸ்’ (The CODEX Alimentarius) நிர்ணயித்துள்ள தரக் கோட்பாடுகளை நெஸ்லே பின்பற்றுகிறது. மேகி மசாலாவில் காரீயத்தின் அளவு இதன்மூலம் பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள குறைவான அளவே பயன்படுத்துகிறோம். தவிர நெஸ்லே நஞ்சன்கூடு தொழிற்சாலையில் உணவுத் தர நிர்ணயம் செய்ய ஆறு பேர் கொண்ட குழு உள்ளது. விற்பனைக்குத் தயாராக இருக்கும் மேகி நூடுல்ஸின் சாம்பிள்களை எடுத்து தினமும் சமைத்து, அதில் என்னென்ன ருசி உள்ளது, எதேனும் அதிகமாக உள்ளதா, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சாப்பிட்டுப் பார்த்து, அவர்கள் சரி என்று அனுமதித்த நூடுல்ஸ்கள் மட்டுமே விற்பனைக்குச் செல்கிறது. தவிர நெஸ்லே காரீயம் பயன்பாட்டுத் தொடர்பாக ஆராய்ச்சிகள் செய்து அதைக் கவனமாக பயன்படுத்த உலகளாவிய முயற்சிகளை மேற்கொள்கிறது. நெஸ்லேயைப் பொருத்தவரையில் பாதுகாப்பான உணவுத் தயாரிப்புத்தான் எங்களின் தாரக மந்திரம். பல கட்டமாக பரிசோதனை செய்த பின்னரே எங்களுடைய பொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. தயாரித்து முடிக்கப்பட்டு பேக் செய்யப்படும் வரை பல அடுக்குச் சோதனைகளைக் கடந்த பிறகுதான் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. உலகம் முழுவதும் உள்ள நெஸ்லே பொருட்களின் தரம் ஒன்றுதான்.’ என்று கூறினார்கள்.

Story image

சுத்தம் சுகாதாரம் பாதுகாப்பு இந்த மூன்றும் தொழிற்சாலை முழுவதும் நிரம்பியிருந்தது.  தொழிற்சாலை வளாகத்தில் வாட்டர் ப்ளாண்ட் ஒன்றும் இயங்கி வருகிறது நீர் மேலாண்மையில் நெஸ்லே சிறந்த விளங்குவதுடன் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் அவர்களின் பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது.

நுகர் பொருள் சந்தையில் தற்போது நெஸ்லே நிறுவனத்தின் பங்களிப்பு 55.5 சதவீதமாக உள்ளது. முன்பு, இது 77 சதவீதமாக இருந்தது.

மேகி நூடுல்ஸ் தயாரிப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடை ஐந்து மாதங்களுக்குப் பிறகு முடிவுக்கு வந்ததையடுத்து சென்ற ஆண்டு நவம்பரில் மேகி நூடுல்ஸ் இந்திய சந்தைகளில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. நெஸ்லே நிறுவனத்தின் அனைத்து ஆலைகளிலும் அதன் உற்பத்தி தற்போது முழு வீச்சில் உள்ளது என்றார்கள் அந்நிறுவனத்தினர். இந்தியாவில், இன்ஸ்டன்ட் நூடுல்ஸுக்கான சந்தை ரூ.2,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட மேகி நூடுல்ஸ் மீண்டு(ம்) வந்துவிட்டதை நுகர்வோர் பலர் வரவேற்கத் தொடங்கிவிட்டார்கள். சிலர் இன்னும் விமரிசனம் செய்தாலும் நாளாவட்டத்தில் அனைவருக்கும் பிடித்தமான எளிமையான உணவாக மேகி நூடுல்ஸ் மீண்டும் ஜெயிக்கும் என்பது உறுதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.