சிறைத் தண்டனையை முடித்துவிட்டு வந்த அவர், வெள்ள நிவாரணக் குழுவில் செயலாளராகப் பணியாற்றி மக்கள் சேவையாற்றினார். "சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டப்பேரவைக்குள் நுழைவோம்' என்ற முழக்கத்தை தேசபந்து முன்வைத்தார். "சுயராஜ் கட்சி' என்ற அமைப்பு காங்கிரஸின் உட்கட்சியாக உருவானது. "ஃபார்வேர்ட்"1924 கல்கத்தா நகர கார்ப்பரேஷனுக்கு தேசபந்து தலைவர். முதன்மை நிர்வாக அதிகாரி நேதாஜி போஸ். மாநகர நிர்வாகம் சூடு பிடித்தது. தெருவெல்லாம் தேசியம் மலர்ந்தது. "ஆள் தூக்கிச் சட்டம்' எனும் அவசரச் சட்டத்தைப் பயன்படுத்தி எந்தக் காரணமும் சொல்லாமல், விசாரணையும் இல்லாமல் சுபாஷ் சந்திர போûஸ பிரிட்டிஷ் அரசு கைது செய்து கல்கத்தா மத்திய சிறையில் அடைத்தது. அவரை விடுவிக்கக் கோரி, மகாத்மா காந்தி, கவிக்குயில் சரோஜினி நாயுடு, மோதிலால் நேரு போன்றோர் கல்கத்தாவுக்குச்சென்று போராடினர்.