தேவை கழிவு மேலாண்மை
தில்லியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இம்மாதத் தொடக்கத்தில் காற்றில் மாசும், புகையும் அதிகரித்துக் காணப்பட்டது.


தில்லியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இம்மாதத் தொடக்கத்தில் காற்றில் மாசும், புகையும் அதிகரித்துக் காணப்பட்டது.
காற்று மாசுக்கு வடக்கு தில்லியில் கடந்த 1994-ஆம் ஆண்டு 21 ஏக்கரில் அமைக்கப்பட்ட பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்படும் கழிவுகளும் ஒரு காரணம் என தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்திருந்தார்.
அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகளும் தில்லியின் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணமாகக் கூறப்பட்டது.
தில்லி நகரம் கடல் பகுதி அருகே இல்லாததால் புகை மூட்டத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. எனினும், கடல் பகுதி அமைந்துள்ள நகரங்களிலும் காற்று மாசானது நுண்ணிய துகள்களாக காற்றில் கலந்து பாதிப்படையச் செய்கிறது.
காற்று மாசுபடுவதால் 72 சதவீதம் பேருக்கு இதய நோய், பக்கவாதமும், 14 சதவீதம் பேருக்கு நுரையீரல் தொடர்பான நோய்களும் ஏற்படுகிறது. 14 சதவீதம் பேர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
காற்று மாசால் ஆண்டுதோறும் இந்தியர்கள் 6,21,138 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதுபோல் காற்று மாசுபாட்டால் தெற்காசியாவில் உயிரிழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 9,36,000 என யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
சுகாதாரச் சீர்கேட்டில் காற்று மாசு முதன்மையானதாக உள்ளது. பிறவகை சூழல் சீர்கேட்டைக் காட்டிலும் காற்று மாசால் சூழல் சீர்கேடு மட்டுமன்றி, சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது.
காற்றில் கலந்துள்ள நச்சுகளை சுவாசிப்பதால் கர்ப்பப் பையில் இருக்கும் சிசுவும் ஊனமாக பிறக்க வாய்ப்புள்ளது என மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் முதன்மைச் செயலர் நசீமுதின் தெரிவித்
துள்ளார்.
காற்று மாசுதான் புவி வெப்பமய
மாதலுக்கும் காரணமாக உள்ளது. காற்று மாசுக்கு என குறிப்பிட்ட எல்லை இல்லை. ஓரிடத்தில் உருவாகும் காற்று மாசானது பிற மாநிலங்களையும், பிற நாடுகளையும் கூட பாதிக்கச் செய்யும்.
2010-ஆம் ஆண்டில் ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட புகைமூட்டம் ஐரோப்பிய நாடுகள் முழுவதையும் பாதித்தது. இதனால் பல நாடு
களில் அப்போது விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பல்ஸ்வா உள்ளிட்ட தில்லியில் உள்ள குப்பைக் கிடங்குகள் மட்டுமன்றி, நாட்டின் பல மாநிலங்களில் உள்ள கிடங்குகளிலும் குப்பைகளை முறையாக மேலாண்மை செய்யாமல் குவியலாக அப்படியே எரிக்கப்படுகிறது.
சென்னை பள்ளிக்கரணை அருகே உள்ள குப்பைக்கிடங்கில் சில ஆண்டு
களுக்கு முன் எரிந்த தீயால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கிடங்குகளில் சேர்க்கப்படும் குப்பைகளில் பிளாஸ்டிக், காகிதம், காய்கனி, கட்டுமானக் கழிவுகள், ரப்பர், மின்னணுக் கழிவுகள், ரசாயன, மருத்துவக் கழிவுகள் உள்ளிட்டவை அடங்கும்.
இவற்றை மொத்தமாக எரிக்கும்போது டையாக்ஸின், கார்பன் மோனாக்ûஸடு உள்ளிட்ட பல்வேறு நச்சு வாயுக்கள் வெளியேறுகின்றன. காற்றில் நுண்ணிய துகள்களாக பரவும் இவை அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கச் செய்கிறது.
முறையாக மேலாண்மை செய்வதில் தயக்கம் காட்டும் குப்பைக் கிடங்கு நிர்வாகம், குப்பைக் கழிவுகளை குறைக்க, அவற்றை எரித்து விடுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் சமூக விரோதிகள் எரிப்பதால் இச்சம்பவம் நடப்பதாகவும், குப்பைகளில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயுவால் தானாகவே தீப்பற்றி எரிவதாகவும் கிடங்கு நிர்வாகத்தினர் கூறுகின்றனர். இதற்கு சரியான தீர்வு, குப்பைக் கிடங்குகளில் திடக்
கழிவு மேலாண்மையை முறையாக செயல்படுத்த வேண்டும்.
குப்பைகளை அறிவியல் ரீதியில் பயனுள்ளவையாக மாற்ற இந்தக் கழிவு மேலாண்மை உதவும். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, கல் - கட்டடக் கழிவுகள், உணவு-இறைச்சிக் கழிவுகள், எரியும் தன்மை கொண்ட கழிவுகள் என தரம் பிரித்து அவற்றை பயன்படுத்தச் செய்வதே திடக்கழிவு மேலாண்மை முறையாகும்.
திட்டமிட்ட திடக்கழிவு மேலாண்மை முறையால் கழிவுப் பொருள்கள் குறைவதுடன் மூலப்பொருள்களுக்கான தேவையும் குறையும்.
அதேசமயம் குப்பைகளை குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து வெளியேற்றும்போதே, மறுசுழற்சி, மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் தரம் பிரித்து வெளியேற்றுவதும் இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வாக அமையும்.
இதனை செயல்படுத்த, தூய்மை இந்தியா திட்டத்தை மேற்கொண்டு வரும் மத்திய அரசு அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
பயிர்க் கழிவுகளை எரிப்பதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதற்கு பதிலாக பயிர்க் கழிவுகளை மதிப்பூட்டி கால்நடை தீவனம் உற்பத்தி செய்தால் விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டலாம்.
அதுபோல் பயிர்க் கழிவுகள் மற்றும் வேளாண் மிச்சங்களை பயோமாஸ் மின் உற்பத்திக்கு பயன்படுத்த முயற்சிக்கலாம். இதனால் பயோமாஸ் மின் உற்பத்திக்கு மூலப்பொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுப்பதுடன், மரபுசாரா எரிசக்தி முறைக்கான மின் உற்பத்தியும்
அதிகரிக்கும். நிலக்கரியை எரித்து உற்பத்தி செய்யப்படும் அனல் மின் நிலையங்களால் ஏற்படும் காற்று மாசைக் காட்டிலும், பயோமாஸ் மின் உற்பத்தி முறையால் ஏற்படும் காற்று மாசு குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
பழைமையான டீசல் வாகனங்களுக்கு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து மாநிலங்களுமே கடைபிடித்தால் காற்று மாசை கணிச
மாகக் குறைக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...