சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கண் கலங்கினால் ஆயிற்றா?

உச்சநீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ள அவலம் பற்றிக் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நம் பிரதமர் நரேந்திர மோடி

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:14 pm

ஜோதிர்லதா கிரிஜா

உச்சநீதிமன்றத்தில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ள அவலம் பற்றிக் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி நம் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அங்கலாய்த்துக் கண் கலங்கியதாகச் செய்திகள் கூறுகின்றன. அவர் உணர்ச்சிவயப்பட்டுக் கண்களைக் கைக்குட்டையால் ஒற்றித் துடைத்துகொண்ட படமும் வெளியாகியுள்ளது.
 நீதிபதிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது ஒரு நியாயமான காரணம்தான். சில காரணங்களில் அது ஒன்றுதானே ஒழிய, அது மட்டுமே முக்கியமான காரணமன்று. தலைமை நீதிபதியின் அங்கலாய்ப்பைப் பற்றிப் படித்ததுமே ஒரு பாமரனுக்கும் கூடத் தோன்றுகிற வேறொரு முக்கியமான காரணம் ஏராளமான எண்ணிக்கையில் கொடுக்கப்படும் வாய்தாக்கள்தான்.
 சீனா இந்தியாவைக் காட்டிலும் மிக அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடு - அதாவது 135 கோடி. அங்கேயே சிவில் வழக்குகளில் மூன்றே மாதங்களுக்குள்ளும், கிரிமினல் வழக்குகளில் ஆறே மாதங்களுக்குள்ளும் தீர்ப்புகள் வழங்கப்படுவதாகப் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. அந்தக் கால கெடுவுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டே ஆக வேண்டும் என்பது அங்குள்ள விதி.
 இங்கே அதைச் சாதிக்க முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்? முக்கியமாக, ஏராளமான வாய்தாக்கள் தரப்படுவதுதான். மூன்றே வாய்தாக்களுக்கு மேல் ஏன் தர வேண்டும்? அதுவும்கூடக் குறிப்பிட்ட கால அளவுக்குள்தான் தரலாம்.
 அதற்கு மேல் வழக்காளர்கள் ஆஜராகவில்லையென்றால் வழக்குக்கான தீர்ப்பு அவர்கள் வராமலேயே வழங்கப்பட்டுவிடும் எனும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.
 நீதித்துறையில் லஞ்ச ஊழல் தலைவிரித்து ஆடிக் கொண்டிருப்பதாகப் பரவலாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லாதிருக்க முடியாது. இது தலைமை நீதிபதிக்குத் தெரியாதிருக்கவும் முடியாது.
 இதைப் பற்றிப் பேசி அவர் கண் கலங்கியிருந்திருக்க வேண்டாமா? பணத்துக்கு விலை போகும் நீதித்துறை அலுவலர்களையும், நீதிபதிகளையும் அவர் சாடியிருக்க வேண்டாமா?
 வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டை ஆண்டபோது இந்நாட்டின் வெப்பம் பொறுக்க மாட்டாமல், கோடை விடுமுறை என்கிற நெடிய கோடைக்கால விடுமுறையை நீதிமன்ற நீதிபதிகளுக்குக் கொடுக்க முற்பட்டார்கள். குற்றங்களின் எண்ணிக்கை தாறுமாறாக எகிறிவிட்ட இந்நாளிலும் நீதிமன்றங்களைக் கிட்டத்தட்ட ஒன்றரை மாதகாலம் ஓய்வில் இருத்துவது சரிதானா?
 திரேதாயுகத்துச் சட்டங்கள் சில இன்றையச் சூழலுக்குப் பொருத்தமானவையாகவோ, நியாயம் வழங்குபவையாகவோ இல்லை என்பதால், அவற்றைச் சீர்திருத்த வேண்டிய கட்டாயம் இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளது முற்றும் சரியே. ஆனால், சட்டமோ, நியாயமோ கடுகளவும் தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தச் சீர்திருத்தங்களைச் செய்ய அனுமதிக்கலாகாது. முக்கியமான நீதிபதிகளும், ஓய்வுபெற்ற நீதிபதிகளும், சட்ட வல்லுநர்களும் ஒன்றாக அமர்ந்து குறைபாடுள்ள சட்டங்களை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதைத் தீர்மானித்து ஒரு வரைவைத் தயாரித்து அதை நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க வேண்டும்.
 அதன் பின், அது நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நீதிபதிகளால் விவாதிக்கப்பட்டப் பிறகு அதில் உள்ள மாற்றப்பட்ட சட்டங்கள் ஏற்கப்பட்டு, அவை நிறைவேற்றப்பட வேண்டும்.
 நீதிபதிகளைப் புறக்கணித்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வசம் மட்டுமே இந்தப் பணி ஒப்படைக்கப்படக்கூடாது. ஏனெனில், தங்களுக்குச் சாதகமான முறையில் அவற்றை அவர்கள் நிறைவேற்றிக்கொள்வார்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகும்.
 குற்றம் புரிந்தவர்கள் சட்டங்களில் உள்ள ஓட்டைகள் வழியே தப்பிவிட வாய்ப்பளிக்காத முறை அமல்படுத்தப்பட வேண்டும். அண்மையில், சீட்டுக் கம்பெனி நடத்தி நடுத்தர மக்களின் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த நிறுவனம் ஒன்று ஒரு சிறு ஒட்டையால் தப்பிவிட்டது. பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீஹப் ச்ப்ஹஜ் - வாம் அதற்குப் பெயர்.
 குற்றம் புரிந்தவர் என்பது தெள்ளத் தெளிவாய்ப் புலப்படும் போது நீதிபதிகள் அவர் சட்டத்தில் உள்ள பொத்தல் வழியே தப்பிச் செல்ல அனுமதிக்காமல் சட்டத்தைப் புறந்தள்ளி நேர்மையான தீர்ப்பை வழங்க அதில் இடம் இருக்க வேண்டும். சில தீர்ப்புகள் முந்தையவற்றிலிருந்து வேறுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எனவே நீதிபதிகளும் சட்டம் ஒன்றே குறி என்றில்லாமல் நியாயப்படியும் அதை வளைக்க வேண்டும்.
 ஆகமொத்தம், கையூட்டுப் பெற்றுக்கொண்டு எண்ணிறந்த வாய்தாக்களைத் தேவையற்று வழங்குவது, அதன் மூலம் இருபது ஆண்டுகள் வரையில் கூட வழக்குகளை இழுத்தடிப்பது, நீதிபதிகளின் எண்ணிக்கை போதாமை, மிக நெடிய - தேவையற்ற - கோடை விடுமுறை ஆகியவற்றைச் சீர்ப்படுத்தினால், வழக்குகளின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துவிடும்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.