வல்லார் யார் வள்ளுவர் அல்லால்?
உலக அளவில் மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பெற்ற நூல்களாக அறியப்பெறுவன, திருக்குர்ஆனும், பைபிளும். இவ்விரு நூல்களும் சமயச்சார்புடையன. சமய நெறிகளைப் பரப்புதற்கும் பின்பற்றுதற்கும் வேண்டிய தேவை கருதி, அந்நூல்கள் மொழிபெயர்க்கப்பெற்றிருக்கின்றன.









