உயிர் ஒன்று; பாலினம் ஐந்து
ஆண்பால், பெண்பால், ஒன்றன் பால், பலர் பால், பலவின் பால் என்று இலக்கணம் கற்றுத் தருவார்கள். சிலருக்கு லோக்பால், பெண் பத்திரிகையாளர் விவாகாரத்தின் அருண் தேஜ்பால், நேர்மையான அதிகாரி துர்கா சக்தி நாக்பால், நஷ்டஈடு கிடைக்காத அப்பாவி போபால் என நாற்பால் மட்டுமே ஞாபகத்திற்கு வரும். தமிழ்ப்பால் அறிந்தவர்க்கோ என்றைக்குமே முப்பால்தான்.










