ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பரிதாப பயணத்தில் மாணவர்கள்

பள்ளி மாணவர்களின் நலனுக்காகத் தமிழக அரசு பல்வேறு இலவசத் திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வரும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ்  பயணம் என்பது மாணவர்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளதா என்று கேட

Updated On :20 செப்டம்பர் 2012, 10:50 am

பள்ளி மாணவர்களின் நலனுக்காகத் தமிழக அரசு பல்வேறு இலவசத் திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வரும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ்  பயணம் என்பது மாணவர்களை முழுமையாகச் சென்றடைந்துள்ளதா என்று கேட்டால் இல்லை என்றே சொல்லலாம்.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்காக இலவசப் புத்தகங்கள், கல்விக் கட்டணம் ரத்து, இலவச சைக்கிள்கள் என எத்தனையோ நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதுபோல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பஸ் பயண அட்டையும் வழங்கி வருகிறது. இதன் மூலம் தமிழகம் முழுவதிலுமுள்ள பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர் என்றும்,  இதற்காக அரசு சுமார் ரூ.300 கோடி வரை உரிய துறைக்குச் செலுத்துவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இத்திட்டத்தின் நோக்கம் முறையாக 100 சதவீத மாணவ, மாணவிகளையும் சென்று சேருகிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அதில் முக்கிய காரணமாக அனைத்துப் பகுதி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் கூறப்படும் கருத்து, பள்ளி தொடங்கும் மற்றும் முடிவடையும் நேரங்களில் பெரும்பாலான கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் வசதி இல்லை என்பதுதான். இதன் காரணமாகப் பல கிராமப்புற மாணவர்கள் இத்திட்டத்தால் பயன் பெற முடியவில்லை.

மேலும், சில பகுதிகளில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வந்த டவுன் பஸ்களும் மெல்ல மெல்ல தாழ்தள சொகுசு பஸ்களாகவும், எல்.எஸ்.எஸ், பி.பி, எஸ்.எஸ்.எஸ்., சில நிறுத்தப் பஸ்கள் என புரியாத பல பெயர்களைச் சூட்டிக் கொண்டு புதிய வகை பஸ்களாக இயக்கப்பட்டு வருகின்றன. இவை பல நிறுத்தங்களில் நிறுத்தப்படுவதில்லை என்பதுடன் கட்டணமும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் எந்தவகை பயண அட்டையும் அனுமதிக்கப்படுவதில்லை என்பது சிறப்பம்சம்.

இது இப்படி இருக்க, இருக்கின்ற ஒரு சில டவுன் பஸ்களையாவது பிடிப்போம் என மாணவர்கள் காத்திருக்கும் நிலையில் அந்த பஸ்ஸின் ஓட்டுநரும், நடத்துநரும் (சிலர் மட்டும்) இலவசப் பயண அட்டையுடன் ஏறும் மாணவ, மாணவிகளை ஏதோ இவர்களின் எதிரிபோல் நினைத்து நிறுத்தாமலோ அல்லது சற்றுத் தொலைவில் சென்று நிறுத்தவோ செய்கின்றனர். ஆனாலும், கிடைத்த பஸ்ûஸத் தவறவிட்டுவிட்டால் வேறு பஸ் கிடைக்காதே என்ற வேதனையில் தலைதெறிக்க ஓடி வந்து ஏறும் மாணவர்களைப் பார்த்தும் இவர்களின் மனது மாறாமல் இருப்பதுதான் வேதனை. ஓடி வரும் மாணவர்களில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனும் இருப்பதுகூட இவர்களுக்குப் பல நேரம் உரைப்பதில்லை.

ஏற்கெனவே இலவசப் பயண அட்டையைப் பெற பள்ளி ஊழியர்கள், போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சில மாதங்கள் அலைந்து இலவச பயண அட்டையைப் பெற்று மாணவர்களுக்கு வழங்குகிறார்கள்.

இப்படி, பள்ளி தொடங்கி சில மாதங்கள் கழித்து இலவச பயண அட்டையைப் பெறும் மாணவர்கள் அந்த அட்டையைப் பயன்படுத்த முடியாமல் அதனை வெறும் காட்சிப் பொருளாகவே வைத்து வரும் நிலையுமுள்ளது.

எனவே, தமிழக அரசின் நல்ல திட்டம் முறையாக மாணவர்களைச் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மாணவர்களின் இலவசப் பயணத்திற்காக தமிழக அரசு அத் துறைக்கு பல கோடிகளை அளித்து வரும் நிலையில், குறிப்பிட்ட தடம் எண் கொண்ட டவுன் பஸ்களில் மட்டும்தான் மாணவர்கள் பயணம் செய்ய முடியும் என்ற நிலையை நீக்கி அனைத்து வகை சாதாரணப் பஸ்களிலும் மாணவர்கள் இலவசப் பயண அட்டை மூலம் பயணம் செய்ய வகை செய்தால் அது அரசின் நல்ல நோக்கத்தை நிறைவேற்றுவதாக அமைவதுடன், எதிர்கால மாணவ சமுதாயம் அரசுக்கு நன்றியுடன் இருப்பார்கள் என்பது உண்மை.

வரும் கல்வியாண்டில் இத்திட்டத்தை அரசு செயல்படுத்தினால் அது  மாணவர்களுக்கு, பெரும் பயனாக இருக்கும் என்பதுடன், இந்த பஸ் பாûஸப் பெறுவதற்காகப் பள்ளி நிர்வாகங்கள் போக்குவரத்துக் கழகங்களுக்குப் பலமுறை படையெடுப்பதைத் தவிர்க்க அந்தந்தப் பள்ளிகளுக்குத் தேவையான பஸ் பாஸ்களை நிர்வாகங்கள் அனுப்பி வைத்தால், அதில் தலைமையாசிரியர்களே கையெழுத்திட்டு விரைவாக இலவசப் பயண அட்டையை வழங்க வழி பிறக்கும். அரசு ஆவன செய்யுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.