திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

அனிருத் பிறந்த நாள்: உயரப் பறக்கும் இசைக்குருவி

உயரப் பறக்கும் இசைக்குருவி மேலும் பல அமர்க்களமான பாடல்களைத் தரவேண்டும்...

News image
Updated On :16 அக்டோபர் 2021, 7:39 am

ரஜினியின் கடைசி இரு படங்கள் - பேட்ட, தர்பார்

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் - மாஸ்டர்

கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் - இந்தியன் 2

சிவகார்த்திகேயனின் சமீபத்திய படம், அடுத்த படம் - டாக்டர் & டான் 

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் - காத்து வாக்குல ரெண்டு காதல்

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் - விக்ரம்

தனுஷின் அடுத்த படம் - திருச்சிற்றம்பலம்

இந்த அத்தனை படங்களுக்கும் உள்ள ஓர் ஒற்றுமை -  அனிருத். 

ஏ.ஆர். ரஹ்மான் கையில் கூட இத்தனை பெரிய தமிழ்ப் படங்கள் கிடையாது. அனிருத் படப் பட்டியல்கள் நிஜமாகவே மிரட்டுகின்றன.  தமிழ் சினிமா இந்த இளைஞன் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறது. இன்று தனது 31-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் அனிருத்.

2011-ல் 3 படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார் அனிருத். கொலைவெறி பாடல் இந்தியா முழுக்கப் பிரபலமானது. முதல் படத்திலேயே பிரபலமான தமிழ் இசையமைப்பாளர்கள் பட்டியலில் இணைந்தார். மாஸ்டர் படப் பாடல் இந்தியாவெங்கும் பிரபலமானது. சினிமா, கிரிக்கெட் நட்சத்திரங்கள் மாஸ்டர் பாடலுக்கு நடனமாடி அதன் விடியோக்களைச் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார்கள். 

Story image

வருடத்துக்கு அதிகபட்சமாக 3, 4 படங்களுக்கு மட்டுமே அனிருத் இசையமைத்து வருகிறார். படங்களின் எண்ணிக்கையை உயர்த்த அவர் எப்போதும் ஆசைப்படுதில்லை. வருடத்துக்கு ஒரு படம் என்றாலும் அந்தப் படத்துக்கு இசை பெருமளவு கைகொடுக்க வேண்டும் என்று மட்டும் எண்ணுகிறார். 2016, 2017 ஆண்டுகளில் தலா இரு தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே இசையமைத்தார். ரெமோ, ரம், விவேகம், வேலைக்காரன். 2018-ல் தானா சேர்ந்த கூட்டம், கோலமாவு கோகிலா, பேட்ட. 2019-ல் இரு தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்தார். தமிழில் தும்பா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும். 2020-ல் தர்பார், மாஸ்டர் என இரு தமிழ்ப் படங்கள் மட்டுமே. 

இப்படிப் பார்த்துப் பார்த்துப் படங்களை ஒப்புக்கொள்ளும் அனிருத், திடீரென பல பெரிய படங்களுக்கு இசையமைப்பது அவருக்குக் கிடைத்துள்ள அங்கீகாரத்தை உறுதிப்படுத்துகிறது. மாஸ்டர் படத்தின் பாடல்கள் பெரிய அளவில் பெற்றி பெற்றிருப்பது பலரையும் அவர் பக்கம் ஈர்த்துள்ளது. விஜய், கமல், ஷங்கர், லோகேஷ் கனகராஜ், சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன் எனப் பிரபலக் கலைஞர்களின் பங்களிப்பில் உருவாகும் படங்களில் அவர் இடம்பெற்றிருப்பதற்குக் காரணம் - அனிருத்தால் பாடல்களை ஹிட் ஆக்க முடியும், இளைஞர்களை ஈர்க்க முடியும் எனத் திரையுலகம் முழுமையாக நம்புவதால் தான். சமீபத்தில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் பாடலும் யூடியூபில் ஏராளமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பாடல்களின் காணொளிகளில் அதிகமாக நடிக்கவும் செய்கிறார் அனிருத். இதனால் அவருடைய முகம் அவருடைய இசை போல ரசிகர்களிடம் நன்கு கவனம் பெற்றுள்ளது. 

பாடல்களின் வெற்றி, பெரிய பட வாய்ப்புகள் என்கிற அம்சங்களை வைத்துப் பார்க்கும்போது தமிழ் சினிமாவின் நெ.1 இசையமைப்பாளர் என்று அனிருத்தைத் தாராளமாக மதிப்பிடலாம். 

இந்த வருடம் கையில் 5 தமிழ்ப் படங்கள் (தெலுங்கு, ஹிந்தியிலும் தலா ஒன்று) உயரப் பறக்கும் இசைக்குருவி மேலும் பல அமர்க்களமான பாடல்களைத் தரவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகனின் விருப்பம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.