சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பிறந்த நாள்: ரசிகர்கள் கொண்டாடிய சூர்யாவின் படங்கள்!

2000 முதல் 2010 வரை சூர்யாவுக்கு நிறைய நல்ல படங்கள் அமைந்தது...

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:59 pm

தினமணி

1997-ல் நேருக்கு நேர் படம், சூர்யாவை தமிழ் ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தியது. சிவகுமாரின் மகனாக இருந்ததால் சுலபமாக திரைத்துறைக்குள் நுழைந்த சூர்யாவுக்கு வெற்றிகள் சுலபமாகக் கிடைக்கவில்லை. தனது நடிப்பால், குணத்தால், உழைப்பால் ஏராளமான ரசிகர்களை ஈர்த்துள்ளார் சூர்யா.

இன்று தனது 45-வது பிறந்த நாளைக் கொண்டாடும் சூர்யாவின் முக்கியமான படங்களைப் பார்க்கலாம்.

நந்தா

Story image

நந்தாவில் நடிப்பதற்கு முன்பு நேருக்கு நேர், காதலே நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, ப்ரெண்ட்ஸ் ஆகிய படங்களில் நடித்தார். ப்ரெண்ட்ஸ் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வெற்றியை ருசித்தார். ஆனால் மற்ற படங்கள் எல்லாம் வசூலில் ஏமாற்றின. நடிப்புக்காகவும் எந்தப் படமும் சூர்யாவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரவில்லை. இந்த நிலையில் ஒரு பெரிய திருப்புமுனைக்காகக் காத்திருந்தார் சூர்யா.

பாலா இயக்கிய நந்தா, சூர்யா மீதான எண்ணத்தை முற்றிலுமாக மாற்றியது. நடிப்புக்கான கதாபாத்திரம் கிடைத்தால் நிச்சயம் அசத்துவார் என்கிற நம்பிக்கையை சூர்யா மீது விதைத்தது. சூர்யாவை ஒரு நடிகனாக முன்னிறுத்திய முதல் படம் என்பதால் நந்தா படத்தை அவரால் மறக்கவே முடியாது.

காக்க காக்க

Story image

சூர்யாவை வசூல் மன்னனாகக் காண்பித்த முதல் படம். படம் வெளிவருவதற்கு முன்பு ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களால் படத்துக்கு நல்ல கவனம் கிடைத்தது. இதனால் முதல் நாளன்று திரையரங்குகளில் ரசிகர்கள் வெள்ளம்.

ஆக்‌ஷன் கதாநாயகனாக, காவல்துறை அதிகாரியாக நடித்த சூர்யா, ரசிகர்களை ஏமாற்றவில்லை. அழகான பாடல்கள், அம்சமான காதல் காட்சிகள், ஆக்‌ஷன் பரபரப்புகள் என ரசிகர்களுக்குப் பெரிய விருந்து படைத்தது காக்க காக்க. அன்புசெல்வன் கதாபாத்திரம் சூர்யாவுக்கு அழகாகப் பொருந்தியது. கெளதம் மேனனுடனான கூட்டணியைத் தொடங்கி வைத்த படம் இது.

இரண்டே வருடங்களில் நந்தாவும் காக்க காக்கவும் சூர்யாவின் பாதையை மாற்றின. அந்தஸ்த்தை உயர்த்தின. பிரபல நட்சத்திரமானார் சூர்யா.

கஜினி

Story image

பிதாமகனில் நல்ல நடிகனாக இன்னொரு முறை நிரூபித்தார் சூர்யா. ஆய்த எழுத்து படத்தில் மணி ரத்னம் படக் கதாநாயகன் ஆனார். எனினும் இன்னொரு பெரிய வெற்றியை அளித்த படம், கஜினி தான்.

பழிவாங்கும் கதைதான் என்றாலும் வித்தியாசமான முறையில் சொல்லப்பட்டதால் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றது. அசினுடனான காதல் காட்சிகளை யாரால் மறக்க முடியும்? 

இந்தப் படத்தின் பெரிய வெற்றி, ஆமிர் கானை ஈர்த்தது. அதே முருகதாஸைக் கொண்டு ஹிந்தியில் கஜினியை உருவாக்கினார். தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் படம் மகத்தான வெற்றியை அடைந்தது. 

சிங்கம்

Story image

ஹரியுடன் இணைந்து வேல் படத்தில் நடித்தார் சூர்யா. அதன் வெற்றியில் ஆச்சர்யப்பட்டு சிங்கம் படத்தில் ஹரியுடன் மீண்டும் இணைந்தார். அதற்கு முந்தைய வருடம் வெளியான அயன் படம் சூர்யாவின் வெற்றிப் படங்களில் இணைந்தது.

சிங்கம் படத்தின் கதை, திரைக்கதை - ஆக்‌ஷன் படத்துக்கான சரியான கலவையாக அமைந்தன. இன்னொரு காவல் அதிகாரி வேடமென்றாலும் காக்க காக்க-வில் பார்த்த அன்பு செல்வன் இதில் இல்லை. துரை சிங்கம் வேடத்தில் அசத்தினார் சூர்யா. பாடல்களும் ஹிட்டாகி, படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது.

வாரணம் ஆயிரம் 

Story image

கெளதம் மேனன் - சூர்யா கூட்டணியில் அமைந்த இன்னொரு அழகான படம்.

தனது தந்தையின் வாழ்க்கை வரலாற்றை வாரணம் ஆயிரம் படமாக மாற்றினார் கெளதம் மேனன். கல்லூரி மாணவர், காதலன், வயதானவர் என பல வேடங்களில் அசத்தினார் சூர்யா. சிக்ஸ் பேக் உடற்கட்டை வைத்து தன் பலத்தை நிரூபித்தார். 

அழகான காட்சிகள், அட்டகாசமான பாடல்கள் என ரசிகர்களுக்கு ஓர் இதமான உணர்வை அளித்தது வாரணம் ஆயிரம். இதுபோன்ற இன்னொரு படத்தில் சூர்யா நடிக்கவேண்டும்.

*

2000 முதல் 2010 வரை சூர்யாவுக்கு நிறைய நல்ல படங்கள் அமைந்தது அவருடைய கதைத் தேர்வில் உள்ள சிறப்பம்சத்தை வெளிப்படுத்துகிறது. இந்தக் காலக்கட்டம் தான் இன்றைக்கும் சூர்யாவுக்குப் பெரிதாக உதவுகிறது. சொல்லப்போனால் 2010-க்குப் பிறகு ஹிட் படங்களும் நல்ல படங்களும் சூர்யாவுக்கு அரிதாகவே அமைந்துள்ளது.

சூரரைப் போற்று, சூர்யாவுக்கு மற்றுமொரு வசந்த காலத்தை உருவாக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.