திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மனதை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்! பிறந்த நாளில் சூர்யா ரசிகர்களிடம் கேட்டுக் கொண்டது இதுதான்!

நடிகன் எனும் வாய்ப்பு அத்தனை எளிதல்ல. அதைத் தக்க வைத்துக் கொள்வது அதை விடக் கடினம்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:18 pm

சினேகா

இன்று (ஜூலை 23) நடிகர் சூர்யா தனது 43-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். நடிக்க வந்ததிலிருந்து தற்போது வரை சூர்யா புகழின் உச்சியில் இருப்பதற்கும், தமிழ்த் திரையின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராகத் திகழ்வதற்கும், அவர் கடந்து வந்த பாதை கடினமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. நேருக்கு நேர் படத்தில் சூர்யாவின் நடிப்பை பார்த்தவர்கள், தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் அவரது நடிப்பைப் பார்க்கும் போது தெரியும் வித்யாசமே அவரது இந்த நீண்ட பயணத்தின் வெற்றி எனலாம். 

Story image

நடிகன் எனும் வாய்ப்பு அத்தனை எளிதல்ல. அதைத் தக்க வைத்துக் கொள்வது அதை விடக் கடினம். 2002-2005-ம் ஆண்டுகளில் விமரிசகர்களால் அதிகம் சாடப்பட்ட நடிகர்களுள் ஒருவராக இருந்த சூர்யா, மெள்ள உருமாறி தற்போது தனக்கென ஒரு தனி பாணியைக் கடைப்பிடித்து வருகிறார். மெளனம் பேசியதே படத்திலிருந்து வித்யாசத்தைக் காண்பிக்கத் தொடங்கிய அவர், காக்க காக்க, வாரணம் ஆயிரம், சிங்கம், அஞ்சான் எனத் தொடர்ந்து பல படங்களில் ஆக்‌ஷன் மற்றும் நடிப்பு என இரண்டிலுமே கலக்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

Story image

உடல் மொழியிலும், முக பாவங்களிலும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தன்னால் நடிகனாக பரிணமிக்க முடியும் என்பதை நிரூபித்தார் சூர்யா. திரை வாழ்க்கைத் தாண்டி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ தான் என்பதை தனது தந்தையைத் தொடர்ந்து கல்வி மேம்பாட்டுக்குச் செய்து வரும் பங்களிப்பின் மூலம் அறியலாம். சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என சூர்யாவுக்கு அனேக ரசிகர்கள் உண்டு. Most Amicable Actor என்றும் சூர்யாவை ரசிகர்கள் பாராட்டுவார்கள். அந்தளவுக்கு ரசிகர்களிடையே நேரடியாகவும், தனது டிவிட்டரின் மூலமாகவும் தொடர்பில் இருப்பவர் சூர்யா.

Story image

அவரது பிறந்த நாளையொட்டி ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் ரசிகர்களிடம் சூர்யா சில விஷயங்களை மனம் திறந்து பேசினார். அவர் கூறியது- 'வாழ்க்கையை புதிய அனுபவங்கள்தான் மேம்படுத்தும். புதுப் புது விஷங்களைக் கற்றுக் கொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டுங்கள். எப்போதுமே ஒரு புதிய அனுபவம் வைத்துக் கொள்ளுங்கள். நாம் செய்கிற வேலையில் நாம்தான் சிறந்தவராக இருக்க வேண்டும். சிறுவனாக இருக்கும் போது சைக்கிள் வேண்டும் என்று ஆசைப்படுவோம். சற்று வளர்ந்த பின்னர் பைக் வேண்டும் என்று அடம் பிடிப்போம். அடுத்தது கார். இப்படி வாழ்க்கையில் புதுசு புதுசுன்னு என எப்போதும் ஒரு உற்சாகமிருந்து கொண்டே இருக்கும். ஆனால் இப்போது நிறைய பேருக்கு அந்த ஆர்வம் குறைகிறதோ என்று தோன்றுகிறது. நிறைய பேர் வாழ்க்கையில் இது போதும் என்று நினைத்து, சீக்கிரம் சலிப்படைந்து விடுகிறார்கள். வாழ்க்கையில் புதியதாக நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ளுங்கள். ஒன்றில் மட்டும் திருப்தியடைந்துவிட வேண்டாம். எல்லாவற்றையும் விட முக்கியம் சந்தோஷம். அதை எக்காரணம் கொண்டும் இழந்துவிடாதீர்கள். வீடு, பணம் போன்றவை மட்டுமே சந்தோஷத்தை தராது. மனத்தை எப்படி எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்வது என்று தெரிந்து கொள்வது ஒரு கலை. நீங்கள் அப்படி சிரித்து சந்தோஷமாக இருந்தால் உங்களைச் சுற்றி எப்போதும் நிறைய பேர் சூழ்ந்து இருப்பார்கள்.

Story image

ரசிகர்களாகிய நீங்கள் என் மீது எந்தளவுக்கு அன்பும் அக்கறையும் வைத்து உள்ளீர்களோ அதே அளவுக்கு எனக்கும் உங்கள் மீது அக்கறை உண்டு. உடல் உறுப்பு தானம், ரத்த தானம் செய்யும் ரசிகர்கள் யாருக்கும் அடிமையாக இருக்க கூடாது. நல்ல பழக்கங்களை கடைப்பிடியுங்கள். குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அது தான் மிகவும் முக்கியம்’ என்றார் சூர்யா.

சூர்யாவின் பிறந்த நாளுக்கு அவரது ரசிர்கள் மட்டுமல்லாமல் அஜித் ரசிகர்களும் வாழ்த்துகளை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். திரையுலகைச் சார்ந்த பலரும் அவருக்கு வாழ்த்த்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.