நடிகை தமன்னாவின் தாயார் ரஜனி பாட்டியா மகளுக்கு அமெரிக்க டாக்டர் மாப்பிள்ளையைப் பார்த்துள்ளார் என்றும், அடுத்த ஆண்டு தமன்னாவின் திருமணம் விமரிசையாக நடைபெறும் என்றும் கடந்த வெள்ளிக்கிழமை செய்திகள் வைரலாகின. இந்த வதந்திக்கு நடிகை தமன்னாவின் தரப்பிலிருந்து ஒரு ட்விட்டர் விளக்கம் வெளிவந்து புரளிக்கு முற்றுப் புள்ளி வைத்தது.
'ஒரு நாள் நடிகர், மற்றொரு நாள் க்ரிக்கெட் வீரர். பின்னர் டாக்டர் இப்படித் தொடர்ந்து என் திருமணம் பற்றிய செய்திகள் வெளியானவாறு உள்ளன. என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய இது போன்ற அடிப்படை ஆதரமற்ற தகவல்களை ஏற்றுக் கொள்ள என்னால் முடியாது. காதலிப்பது என்பது ஒரு இன்பகரமான விஷயம் தான். ஆனால் தற்போது சிங்கிளாக இருப்பதில் சந்தோஷமாகவே உள்ளேன். என்னுடைய பெற்றோர் எனக்கு மாப்பிள்ளை வேட்டை எதுவும் செய்யவில்லை. நான் பாட்டுக்கு ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் சமயத்தில், எங்கிருந்துதான் இத்தகைய வதந்தியை பரப்புகிறார்களோ? நான் என்னுடைய வேலையைத் தான் காதலிக்கிறேன். எனது திருமணம் பற்றி நிச்சயம் அனைவரிடமும் கூறுவேன். இது போன்ற வதந்திகளைப் பரப்பாதீர்கள். என்னுடைய பெயரிடப்பட்ட திருமண அட்டை இன்னும் தயாராகவில்லை, நானும் கூட எனவே யாருடைய கற்பனையிலிருந்தோ உதித்த இந்த கிசுகிசுக்களுக்கு நான் பொறுப்பல்ல என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்’ என விளக்கம் தந்திருந்தது தமன்னாவின் ட்விட்டர் பதிவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


