நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நடிகர் விஜய் சேதுபதி கன்னட படத்தில் அறிமுகமாகிறாரா?

மக்கள் செல்வன் என்ற ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் சேதுபதி கோலிவுட்டில் முன்னணியில் உள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:10 pm

ராக்கி

மக்கள் செல்வன் என்ற ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் சேதுபதி கோலிவுட்டில் முக்கியமான நடிகராக உள்ளார். விரைவில் இவர் நடிப்பில் ஜுங்கா எனும் படம் இம்மாத  இறுதியில் வெளி வரவிருக்கிறது. இது தவிர, செக்க சிவந்த வானம், 96, சூப்பர் டீலக்ஸ், சீதக்காதி, உள்ளிட்ட படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

கோலிவுட் மட்டுமல்லாமல் தற்போது சாண்டில்வுட்டிலும் விஜய் சேதுபதி நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கன்னட இயக்குநர் சிவ கணேஷின் 'அக்கடா' எனும் படத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கியமான வேடம் ஏற்கிறார். தமிழிலும் 'எடக்கு' எனும் பெயரில் இந்தப் படம் வெளிவரும். இது தவிர சாய் ரா நரசிம்ம எனும் தெலுங்குப் படத்தின் டோலிவுட்டிலும் அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி. சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கும் முக்கிய கதாபாத்திரமாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.