திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழ்ப் படங்களில் நடிக்க அதிக ஆசை: ஜான்வி கபூர்

ஜான்வி கபூர் தமிழ் சினிமா குறித்து பேசியுள்ளார்...

News image

நடிகை ஜான்வி கபூர்

Updated On :31 மே 2026, 1:12 pm IST

நடிகை ஜான்வி கபூர் தமிழ் சினிமாவில் நடிக்க அதிக ஆசை இருப்பதாகக் கூறியுள்ளார்.

நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகளான நடிகை ஜான்வி கபூர் பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவிலும் கவனம் பெற்று வருகிறார். தெலுங்கில், தேவரா படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவுக்குள் வந்தார்.

தற்போது, தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதுடன் நல்ல கதைகளையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். ஆஸ்கர் வரை மிகுந்த பாராட்டுகளைப் பெற்ற, ‘ஹோம் பவுண்ட்’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

நடிகர் ராம் சரணுடன் இவர் நடித்த பெத்தி ஜூன் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஜான்வி கபூர், “நான் தென்னிந்திய படங்களில் நடிப்பதில் ஆர்வமாக உள்ளேன். தமிழ், தெலுங்கு மொழிகள் புரிந்துகொள்ள எளிதாக இருக்கிறது. ஆனால், மலையாளம் இனிமையான மொழியாக இருந்தாலும் அதனைப் புரிந்துகொள்வதில் எனக்கு சிரமம் உள்ளது. அதனால், இப்போதைக்கு மலையாள சினிமாவில் நடிக்க திட்டம் இல்லை. தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டுமென அதிக ஆசை உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Janhvi Kapoor has stated that she has a strong desire to act in Tamil cinema.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.