நடிகை அனன்யா பாண்டேவின் நடனக் காட்சி விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் அனன்யா பாண்டே. பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருபவர் என்பதால் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவரைச் சமூக வலைதளங்களில் பின்தொடர்கின்றனர்.
இறுதியாக, சந்த் மேரா தில் (chand mera dil) என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மே. 22 திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
ஆனால், இப்படத்தில் இடம்பெற்ற அனன்யா பாண்டேவின் பரதநாட்டிய நடனக் காட்சி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. காரணம், பரதநாட்டியத்தின் ஒழுக்கத்தையும், முத்திரைகளையும் அவமானப்படுத்துவது போல் நடனம் இருப்பதாக ரசிகர்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த மோசமான நடனக் காட்சியில் அனன்யா பாண்டேவின் பின்னணியில் நட்ராஜர் சிலையையும் வைத்திருப்பதால் பலரும் நல்ல கலையை சீரழிக்கவே இப்படியான காட்சிகளை வைக்கிறார்கள் என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த கடுமையான விமர்சனங்களால் படக்குழுவினர் இக்காட்சியை நீக்குவார்களா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
Actress Ananya Panday's dance sequence is facing criticism.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









