இசைஞானி இளையராஜாவின் முதல் சிம்பொனி அனைத்து ஆடியோ தளங்களிலும் வெளியாகவுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜா 'வேலியண்ட்’ எனப் பெயரிட்ட தன் சிம்பொனி இசையை லண்டனில் கடந்தாண்டு மார்ச் மாதம் அரங்கேற்றம் செய்தார்.
சிம்பொனி இசைக்கென பிரபலமான ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ரா குழு 45 நிமிடங்கள் நீடிக்கக்கூடிய இளையராஜாவின் சிம்பொனி இசைக்குறிப்புகளை வாசித்து அசத்தினர்.
சிம்பொனியை எழுதி அதனை சர்வதேச அளவில் அரங்கேற்றிய ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் என்ற பெருமையை இதன்மூலம் இளையராஜா பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, தனது ரசிகர்கள் கேட்பதற்காக சிம்பொனி இசையை இளையராஜா சென்னையில் வருகிற மே 30 ஆம் தேதி அரங்கேற்றம் செய்வதாக முன்னர் அறிவித்திருந்தார். அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மேலும், பொதுவெளியில் அவரது சிம்பொனி இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், இளையராஜாவின் ‘வேலியண்ட்’ சிம்பொனி அனைத்து ஆடியோ வெளியீட்டுத் தளங்களிலும் வருகிற ஜூன் 1 அன்று வெளியாகும் என அவரது இசை நிகழ்ச்சிகளை நடத்தும் மெர்குரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசையை வருகிற ஜூன் 1 முதல் அனைவரும் கேட்டு ரசிக்க முடியும்.
Summary
Ilaiyaraaja's First Symphony Releasing Soon on All Platforms
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










