தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராக தேவன் இளையராஜா..! பின்னணி இசை பட ரிலீஸுக்கு முன்பே வெளியாகுமென அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்த புதிய அப்டேட் குறித்து...

News image

கார்த்திக் சுப்புராஜ், இளையராஜா. - படம்: எக்ஸ் / கார்த்திக் சுப்புராஜ்.

Updated On :22 மே 2026, 2:27 pm IST

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள புதிய படத்தின் பின்னணி இசை தனி ஆல்பமாக பட ரிலீஸுக்கு முன்பே வெளியாகுமென தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

குறும்படங்களின் மூலம் பிரபலமாகி பீட்சா, ஜிகர்தண்டா, மகான் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அசத்தியது.

தற்போது, கார்த்திக் சுப்புராஜ் தனது 10ஆவது படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தை ஜியோ ஸ்டூடியோஸ், தம்மம் ஃபிலிம்ஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மகான் படத்துக்குப் பிறகு நான் எடுக்க நினைத்த, எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது என் 10ஆவது திரைப்படம். ஒரு கதைதான் கதைசொல்லியைத் தேர்ந்தெடுக்கிறது என்பதை நான் மிகவும் நம்புகிறேன். இந்தக் கதை தனக்கான நேரத்தை எடுத்துக்கொண்டுள்ளது. கிடைத்த வாய்ப்புகளில் சிறந்த மனிதர்களால் இந்தப் படம் உருவாகியுள்ளது.

நல்ல தயாரிப்பாளர்கள் கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் முதல்முறை கதை சொல்லும்போதிருந்தே என்னுடைய நோக்கத்திலேயே அவர்களும் இருந்தார்கள். என்னுடைய கனவுதான் அவர்களுடையதுமாக இருந்தது.

நம்பமுடியாத ஒன்று என்னவெனில் மேஸ்ட்ரோ இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைப்பதுதான். இது அவரது 1540ஆவது படம்.

நான் அவரது இசையைக் கேட்டு வளர்ந்தவன். வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் அவரது பின்னணி இசையோ பாடலோ பொருந்திப்போகும். மகிழ்ச்சி, சோகம், காதல், கோபம், உத்வேகம் என எல்லாமே அவரது இசையில் ஒன்றிணைந்திருக்கும். எனக்கு அவர் வாழ்க்கை முறை. பலருக்கும் அப்படித்தான்.

அவருடன் வேலைப் பார்ப்பது என் வாழ்நாள் கனவு. முந்தைய படங்களுக்கு அவரிடம் செல்லும் தைரியம் எனக்கு இல்லை. இந்தப் படத்தின் முதல் கட் முடித்த பிறகு அவரிடம் காட்ட வேண்டுமென நினைத்தேன். அவர் சம்மதம் தெரிவிப்பார் என வலுவாக நினைத்தேன். அதேமாதிரி அவரும் கூறினார்.

சனிக்கிழமை இரவு அவர் படத்தைப் பார்த்தார். படம் பிடித்ததால் அடுத்த நாள் காலை முதலே இசையமைக்கலாம் என்றார். அதுமுதல் அடுத்த 25 நாள்கள் ராக தேவனுடன் ஆன்மிகப் பயணம் சிறப்பாக அமைந்தது.

இசையை உருவாக்குவதை நேரடியாகப் பார்ப்பது மிகவும் நம்பமுடியாததாக இருந்தது. மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்.

பாடல்களைத் தாண்டி பின்னணி இசையை தனி ஆல்பமாக படத்தின் ரிலீஸுக்கு முன்பாக வெளியிடலாம் என இளையராஜா சாருமே கூறியுள்ளார். அதனால், விரைவில் அதனை வெளியிடவிருக்கிறோம். நீங்கள் அதைக் கேட்டு, உணர்ந்து, உருக நான் காத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Summary

background score will be out seperate album says Karthick subbaraj about ilayaraaja

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.