/

380 எபிசோடுகளுடன் தனம் தொடர் நிறைவு!

தனம் தொடர் நிறைவடைந்தது தொடர்பாக...

News image

தனம் தொடர் நிறைவு - படம்: எக்ஸ்

Updated On :19 மே 2026, 11:52 am IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தனம் தொடர் 380 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.

நடிகை சத்யா தேவராஜன் மற்றும் நடிகர் சத்யா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்து வந்த தொடர் ‘தனம்’. இந்தத் தொடர் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.

சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடரில் ஆதிரை பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சத்யா தேவராஜன், தனம் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடித்து வந்தார்.

மேலும் இந்தத் தொடரில் சத்யா எஸ்.கே., ரூபா ஸ்ரீ, ஐஸ்வர்யா ரவிச்சந்திரன், விஜே கல்யாணி, பிரியங்கா சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்,

இந்தத் தொடரில், ஸ்ரீகுமார் ஆட்டோ ஓட்டுநராக இருப்பார், அவர் இறந்த பிறகு, அந்த ஆட்டோவின் மூலம் தனம் எவ்வாறு தனது குடும்பத்தை கவனித்துக் கொள்கிறாள் என்பதே இந்தத் தொடரின் மையக்கரு.

இந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தனம் தொடர், பரபரப்பான இறுதிக்கட்ட கிளைமேக்ஸ் காட்சிகளுடன், 380 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.

Summary

The series Dhanam, which was airing on Vijay TV, concluded after 380 episodes.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.