திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இளையராஜாவை காயப்படுத்தும் எண்ணமில்லை: கருப்பு படக்குழு வருத்தம்!

இளையராஜா காப்புரிமை விவகாரம் தொடர்பாக, கருப்பு படக்குழு வருத்தம்.

News image

இளையராஜா - கோப்புப்படம்

Updated On :19 மே 2026, 10:29 am IST

இளையராஜாவை காயப்படுத்தும் எண்ணமில்லை என்று வருத்தம் தெரிவித்து, கருப்பு படக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

பணத்திற்காக உண்மைக்கு எதிராக வாதாடும் வழக்குரைஞர்கள் ஒன்றிணைந்து போராடுவது போன்ற காட்சியில் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி, இளையராஜாவின் ‘போராடடா ஒரு வாளேந்தடா’ பாடலைப் பயன்படுத்தியிருந்தார்.

அந்தப் பாடல் பல ஆண்டுகளாக குறிப்பிட்ட சமூக மக்களின் உரிமைக்கான பாடலாக இருக்கிறது. அப்படியான பாடலைத் தேவையற்ற இடத்தில் பயன்படுத்தியதுடன் இளையராஜாவின் காப்புரிமை விவகாரத்தைக் கிண்டலடித்து அவமரியாதை செய்துள்ளதாக ஆர்ஜே பாலாஜியைப் பலரும் விமர்சித்து வந்தனர்.

இது குறித்து, கருப்பு படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிரீம் வாரியர்ஸ் விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தெரிவித்திருப்பதாவது:

”இசைஞானி இளையராஜாவுக்கு, "கருப்பு" திரைப்படத்தில் தங்கள் பெயரைப் பயன்படுத்தி வரும் காட்சி என்பது செய்தியை கடத்தும் நோக்கத்திற்காக கையாளப்பட்ட ஒரு தற்செயல் நிகழ்வு.

50-வருடங்களுக்கும் மேலாக இசை உலகை ஆட்சி செய்யும் இசை அரசனை, காயப்படுத்தும் எண்ணமோ, களங்கப்படுத்தும் எண்ணமோ படக்குழுவிற்கு சிறிதளவும் இல்லை.

உள்நோக்கம் ஏதுமின்றி வைக்கப்பட்ட காட்சியினால், தாங்களோ, தங்களைச் சார்ந்தவர்களோ, இசைஞானியின் ரசிகர்களோ, பிறரோ, மனம் புண்பட்டிருந்தால், அதற்கு எங்களின் தாழ்மையான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Summary

The crew of the film Karuppu has issued a statement expressing regret, clarifying that they had no intention of hurting Ilaiyaraaja.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.